உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்துார் கட்டுரை போட்டி அறிவிப்பு

ஆப்பரேஷன் சிந்துார் கட்டுரை போட்டி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியை ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பதிலடி நடவடிக்கையை, நம் பாதுகாப்பு படையினர் கடந்த மாதம் 7ம் தேதி நடத்தினர். இதன் தாக்கத்தை இளைஞர்கள் உணர்ந்து கொள்ளும் நோக்கத்தில், ராணுவ அமைச்சகம் சார்பில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை நம் ராணுவ அமைச்சகம் நடத்துகிறது. போட்டியாளர்கள், தங்கள் கட்டுரையை, 600 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கும்படியும், ஹிந்தி அல்லது ஆங்கில மொழியில் மட்டுமே எழுத வேண்டும்.இக்கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு தலா 10,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும், தேர்வு செய்யப்படும் முதல் 200 பேர் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருடன், டில்லி செங்கோட்டையில் நடக்கும், 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 02, 2025 03:45

பாராளுமன்றத்துக்கு கூட கட்டுரைப்போட்டி வைத்து அதில் இராகுல் காந்தி மற்றும் கார்கே போன்றோரையும் சேர்த்து கட்டுரை எழுத வைக்க வேண்டும். அதை பொது வெளியில் வெளியிட்டால் பாகிஸ்தான் கூட அவர்கள் இருவருக்கும் பாஸ்போர்ட் கொடுக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை