உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டுயானைகளை பிடிக்கும் ஆப்பரேஷன் துவக்கம்

காட்டுயானைகளை பிடிக்கும் ஆப்பரேஷன் துவக்கம்

ராம்நகர்:சென்னப்பட்டணாவில் மக்களை பீதிக்கு உள்ளாக்கும் இரண்டு காட்டு யானைகளை பிடிக்க, வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கேப்டன் மஹேந்திரா தலைமையில், யானைகளை பிடிக்கும் நடவடிக்கை நேற்று துவங்கியது.ராம்நகர், சென்னப்பட்டணாவில் சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சமீப நாட்களாக இரண்டு யானைகளின் தொந்தரவால், மக்களும், விவசாயிகளும் அவதிப்பட்டனர். யானைகளை பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறையிடம் அனுமதி கோரி அதிகாரிகள் காத்திருந்தனர்.அனுமதி கிடைக்காததால், யானைகளை பிடிக்க முடியாமல் அதிகாரிகள் மவுனமாக இருந்தனர். இந்நிலையில் வனத்துறையின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து காட்டு யானைகளை பிடிக்க கேப்டன் மஹேந்திரா தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னப்பட்டணாவில் அட்டூழியம் செய்த யானையை, வனத்துறையினர் பிடித்து பழக்கினர். அதற்கு மஹேந்திரா என, பெயர் சூட்டினர். இப்போது அதே யானையின் தலைமையில், காட்டு யானைகளை பிடிக்கும் நடவடிக்கை நேற்று துவங்கியது.நடவடிக்கையை துவக்கும் முன்பு, சென்னப்பட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வர் முன்னிலையில், கெங்கல் ஹனுமந்தையா கோவிலில், யானைகளுக்கு பூஜை நடத்தப்பட்டது. பூஜை முடிந்த பின், யானைகள் நடவடிக்கையை துவக்கின.யோகேஸ்வர் கூறுகையில், ''10 ஆண்டுகளாக, எங்கள் தாலுகாவில் காட்டு யானைகளின் தொல்லை உள்ளது. யானைகளை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. இப்போது யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முதற்கட்டமாக ஒரு யானை பிடிக்கப்படும். வனத்துறை ஊழியர்களுடன், டாக்டர்கள் குழுவும் சென்றுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை