உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி

மணிப்பூரில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ மணிப்பூரில் பற்றி எரியும் நெருப்பில் எதிர்க்கட்சிகள் எண்ணெய் ஊற்றும் எதிர்க்கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசியதாவது: மணிப்பூர் மாநில சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கலவரம் தொடர்பாக 11 ஆயிரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன்,500 பேர் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=89w4kizv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மற்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. அமைதியை கொண்டு வர சம்பந்தப்பட்டவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் பல வாரம் தங்கி இருந்தார். வெள்ள சூழ்நிலையை சமாளிக்க அம்மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கியது. இன்று தேசிய பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் மணிப்பூர் சென்றுள்ளன. மணிப்பூரில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என எச்சரிக்கிறேன். மாநிலத்தில் 10 முறை ஜனாதிபதி ஆட்சியை காங்கிரஸ் அமல்படுத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூலை 03, 2024 19:32

அந்த நெருப்பை பற்ற வைத்ததே நீங்கள் தானே?


J.Isaac
ஜூலை 04, 2024 15:12

உண்மை


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2024 18:30

அமைதி பூங்காவாக இருக்கும் மணிப்பூரில் எண்ணையை ஊற்றி பற்றவைத்து குளிர்காய காங்கிரஸ் மற்றும் திமுக எண்ணுகிறது.


J.Isaac
ஜூலை 04, 2024 15:17

அமைதி பூங்காவா?


கௌசிக்
ஜூலை 03, 2024 17:07

பிரச்சனையை தீர்க்க முடியலை. இங்கே பார்லிமெண்ட்டில் கூவ மட்டும் தெரியுது.


vadivelu
ஜூலை 04, 2024 07:22

கரெக்ட்டாக சொன்னீர்கள், சுதந்திரம் அடைந்ததில் இருந்து உள்ள பிரச்னை அதை தீர்க்காமல் பார்லிமென்டில் கூச்சல் போடுகிறார்கள் வெட்கமே இல்லையே.


Mario
ஜூலை 03, 2024 16:43

நீங்கள் மணிப்பூர் போகவேண்டியதுதானே


john
ஜூலை 03, 2024 15:41

காங்கிரஸ் எதிர்கட்சி ஆனதிலிருந்து பிரதமருக்கு நிம்மதி போச்சு எதாவது சொல்லி காங்கிரசுமேல குற்றம் சுமத்தனும்


முருகன்
ஜூலை 03, 2024 15:17

அரைப்பதற்கு சென்றால் நல்லது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ