உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி

அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து, ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது அரசியல் சாசனத்திற்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டனர் '' என, அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் கூறினார்.ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.இது தொடர்பாக ஜக்தீப் தன்கர் கூறியதாவது: அரசியல்சாசனத்திற்கு சவால்விடும் வகையிலும், அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக எதிர்க்கட்சியினரின் செயல் உள்ளது. வெளிநடப்பு செய்ததன் மூலம், எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை கார்கே மீறி உள்ளார். அவர்கள் அரசியல்சாசனத்தை அவமரியாதை செய்துள்ளனர். தங்களின் செயலை அவர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.எந்த இடையூறும் இன்றி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர்களுக்கு நான் உறுதி அளித்தேன். இன்று அவர்கள் அவையை விட்டு வெளியேறவில்லை. மரியாதையை விட்டுச் சென்றார். அவர்களின் முதுகை எனக்கு காட்டவில்லை. அரசியல்சாசனத்திற்கு காட்டினர். என்னையையோ, உங்களையோ அவர்கள் அவமதிக்கவில்லை. அரசியல்சாசனத்தின் மீது ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி உள்ளனர். அரசியலமைப்பை அவமதிக்கும் செயல், இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது. அவர்களின் செயலுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது, கையில் வைத்து இருப்பது அல்ல. இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
ஜூலை 03, 2024 20:25

அவர்கள் என்றைக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து இருக்கிறார்கள்...... ஏற்கெனவே எமர்ஜென்ஸி கொண்டு வந்து..... அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து விட்டார்கள்... அவர்கள் டைரி வைப்பது போல் சும்மா கைகளில் வைத்து கொண்டு சீன் போட்டார்கள்.... அவ்வளவு தான்.


Mahendran Puru
ஜூலை 03, 2024 19:25

இப்படி ஏடாகூடமாக பேசி அரசியல் செய்தால்தான் அரசர் மகிழ்ச்சியடைவார், ஜனாதிபதி பதவி கிடைக்கும். அப்படி அன்று மம்தாவுடன் மல்லுக்கு நின்றதால் தான் துணை ஜனாதிபதி பதவி வாங்கினார். கெட்டிக்காரர்.


Swaminathan L
ஜூலை 03, 2024 18:25

வேறென்ன செய்ய முடியும்? நேற்று லோக் சபாவில் திட்டமிட்டபடி தொடர் தவளைக் கூச்சல் இரண்டரை மணி நேரம் போட்டும் பிரதமர் உரையை தடுக்க, முடக்க முடியவில்லை. அவர் சொல்ல நினைத்தது அத்தனையையும் பேசி அவை ரெகார்ட் ஆகி விட்டன. இன்று, அதே யுக்தியை இராஜ்ய சபாவில் செய்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து விட்டது. ஆகவே, வெளி நடப்பு ஒன்று தான் வழி,


அப்புசாமி
ஜூலை 03, 2024 17:03

இன்னும்.பெரிய்ய்ய புஸ்தகமா வெச்சு கண்ணுல ஒத்திக்கச் சொல்லுங்க.


Indian
ஜூலை 03, 2024 16:39

அரசியல் சாசனத்திற்கு சவால் விடுவது ஆளும் கட்சி தான்


karthik
ஜூலை 03, 2024 16:20

எதுக்கு வோட்டு போட்டு அனுப்பினோம் என்ன பண்ணிட்டு இருக்காங்க...


Veeraputhiran Balasubramoniam
ஜூலை 03, 2024 16:50

இவர்களாவது நமது வாக்கு களால் உள்ளே போகவில்லை அவர்களுக்குள் சில கணக்கு போட்டு புதிய குறுகிய கால கூட்டணி உருவாக்கி பதவி பெற்றவ்ர்கள், மக்கள சந்திக்க தயிரியம் இல்லாத ஒரு கும்பல்


Dharmavaan
ஜூலை 03, 2024 16:50

ஒட்டு போட்டவனுக்கு மூளை இல்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை