உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் அமளி கூடாது; எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை

பார்லியில் அமளி கூடாது; எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ளட்டும். அவைக்கு உள்ளே அமளியில் ஈடுபடக் கூடாது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இன்றைய பார்லி., குளிர் கால கூட்ட தொடர் துவங்கும் முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது: இன்று நடக்கும் பார்லி., கூட்டம் மிக இந்தியா வளர்ச்சிக்கு உதவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. பீஹாரில் ஜனநாயக குரல் தேர்தல் மூலம் எதிரொலித்தது. இந்த தோல்வியை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது.

ஒத்துழைப்பு

தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் இருந்து மீண்டு வந்து, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை. இந்தியா எப்போது ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது. பார்லிமென்டை கூச்சல், குழப்பம் ஏற்படுத்தும் இடமாக பயன்படுத்தக் கூடாது. குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்.

வளர்ச்சியே முதன்மை

மக்கள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் பேச வேண்டும். இளம் எம்பிக்கள், முதல் முறை எம்பிக்கள் பார்லிமென்டில் அதிக நேரம் பேச முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ளட்டும். அவைக்கு உள்ளே அமளியில் ஈடுபடக் கூடாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shankar
டிச 01, 2025 11:32

நீங்க என்னதான் சொன்னாலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத்தான் செய்வார்கள். அமளியில் ஈடுபடுபவர்களுக்கு அன்றைய தினம் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் எல்லாம் கிடைக்காது என்று ஒரு சட்டத்தை கொண்டுவாருங்கள். அதுபோல நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது வராத உறுப்பினர்களுக்கும் இதுபோன்று செய்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டு இவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டு தான் போகிறது.


naranam
டிச 01, 2025 11:19

குண்டு கட்டா தூக்கி வெளியில் வீசிடுங்க! சம்பளம் மற்றும் உபரி அல்வன்சுகளையும் நிறுத்திடுங்க.. தானா வழிக்கு வருவாங்க


Keshavan.J
டிச 01, 2025 11:02

Your advice will not reach


மேலும் செய்திகள்