உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓ.பி.எஸ்.,சொத்து குவிப்பு வழக்கு; மறுவிசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

ஓ.பி.எஸ்.,சொத்து குவிப்பு வழக்கு; மறுவிசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.2001 - 2006ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ்., வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து சேர்த்ததாக, தி.மு.க., ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ்., மனைவி விஜயலட்சுமி, மகனும், முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமார் உள்பட அவரது உறவினர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ljcygh2s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியமைந்த போது, வழக்கை திரும்பப்பெற்றுக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, ஓ.பிஎஸ்., உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து, சிவகங்கை கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிவகங்கை கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்தார். மேலும், இது தொடர்பான வழக்கை மதுரை சிறப்பு கோர்ட்டில் நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டார். இதையடுத்து, தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பி.எஸ்., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி.எஸ்.,க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 'சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரத்தை சென்னை ஐகோர்ட் எடுத்துக் கொண்டு, குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஓ.பி.எஸ்., மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும்' என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sampath Kumar
நவ 29, 2024 17:52

எல்லாம்பஜ்பகரனின் கைங்கரியும் யாரு எல்லாம் பிஜேபிக்கு ஜல்லர தட்டுகிறானோ அவனுக்கு தப்புகள் மறைக்கப்படும் மோடி அரசின் ஏழுதாத்தா சட்டம்


கூமூட்டை
நவ 29, 2024 15:54

திராவிட மாடல் எல்லாம் ஒரு வகை திருட்டு சட்டம் காசு இல்லாத மக்களுக்கு மட்டும். அரசியல் ஊழல் வாதிதக்காளி களுக்கு கிடையாது


அப்பாவி
நவ 29, 2024 15:47

2012 வருஷ வழக்கு. இன்னும் 25 வருஷம் விசாரிச்சு , தடைபோட்டு, மீண்டும் விசாரிச்சு ஒரு நல்ல தீர்ப்பா 2047 ல குடுங்க எசமான்.


சம்பா
நவ 29, 2024 14:43

நீதி மன்றங்கள் ஒன்னும் செய்ய முடியாத நிலையில் தான் உள்ளதோ !


சம்பா
நவ 29, 2024 14:43

நிதி மன்றங்கள் ஒன்னும் செய்ய முடியாது எல்லாம் ஏழை மீது தான்


GMM
நவ 29, 2024 14:26

சிறப்பு நீதிமன்றம் அதிகாரத்தை சென்னை உயர் நீதி எடுக்க கூடாது. சென்னை நீதியை உச்ச நீதிமன்றம் எடுத்து இடைக்கால தடை விதிக்கலாம். ஆதாரமுள்ள எந்த குற்றச்சாட்டும் விசாரணை துவங்க நீதிமன்றத்தில் போராட வேண்டி உள்ளது. பலன் முழுவதும் வக்கீல் மீது. பாதிப்பு முழுவதும் நீதிபதிகள், விசாரணை அமைப்புகள் மீது. தீர்ப்பை எதிர்த்து தான் முறையீடு செய்ய முடியும்.


naranam
நவ 29, 2024 14:18

தடை விதிப்பது ஜாமீன் கொடுப்பது இதைத் தவிர வேறு எதுவும்....


sundarsvpr
நவ 29, 2024 14:15

ஊழல் வழக்குகளை ஆண்டுக்கணக்காய் விசாரித்து கால விரயம் செய்வது தேவை அற்றது. ஆயிர கணக்கில் ஓன்று இரண்டு பேர் தண்டிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து மீண்டும் தேர்வு பெற்று ஊழல் செய்கிறார்கள். வாக்குகள் பெற லஞ்சப்பணத்திற்கு என்ன செய்வது? ஊழல் பணம் மக்களுக்கு மீள திரும்புகிறது இதனால். ஊழல் ஒரு குற்றம் என்று நீதிமன்றம் கருதுவது சரியா என்பதே ஒரு சர்ச்சைகு உரியவிவாதம். மாணவர்களுக்கு ஊழல் என்று பாடம் இருந்தால் இவர்கள் மூலம் நல்ல தீர்வுகள் நீதிமன்றத்திற்கு கிடைக்கும்.


Ahamed Rafiq
நவ 29, 2024 14:09

எம்ஜிஆர் அய்யாவிற்காக அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தேன்.


Perumal Pillai
நவ 29, 2024 13:52

One of the main functions of the SC seems to be safe guarding the OPS


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை