உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு பெண் உதவி கலெக்டர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு

பெங்களூரு பெண் உதவி கலெக்டர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பணியில் அலட்சியமாக செயல்படுவதுடன், லஞ்ச புகாரிலும் சிக்கிய பெங்களூரு தெற்கு உதவி கலெக்டர் அபூர்வா பிடரி மீது வழக்கு பதிவு செய்ய, மண்டல கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., சங்கர் பிடரி. இவரது மகள் அபூர்வா பிடரி. கே.ஏ.எஸ்., எனும் கர்நாடக நிர்வாக பணி அதிகாரியான இவர், பெங்களூரு தெற்கு உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார். 'பணிக்கு சரியாக வருவது இல்லை, நிலத் தகராறு தொடர்பாக நிலுவையில் இருக்கும் கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை' என்று, அபூர்வா மீது வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவுக்கு புகார்கள் சென்றன.கடந்த மாதம் 19ம் தேதி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அமைச்சர் சென்றார். அப்போது, அபூர்வா பணிக்கு வந்துவிட்டு வெளியே சென்றது தெரிந்தது. உதவி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருந்த மக்கள் மற்றும் விவசாயிகள், 'அனைத்து பணிகளுக்கும் உதவி கலெக்டர் அபூர்வா லஞ்சம் கேட்பதாக புகார் கூறினர். இதனால், உதவி கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வருவாய்த் துறையின் பெங்களூரு மண்டல கமிஷனர் அமலன் ஆதித்யா பிஸ்வாஸுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.இந்நிலையில், அபூர்வா மீது போலீசில் புகார் அளித்து, லஞ்ச வழக்கு பதிவு செய்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு நகர கலெக்டர் ஜெகதீஷுக்கு, மண்டல கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நேற்று அளித்த பேட்டி:வருவாய்த் துறையில் நன்கு பணி செய்யும் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களுக்கு உரிய கவுரவத்தை கொடுக்கிறோம். பணியில் அலட்சியமாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறோம். அதை பொருட்படுத்தாமல் திரும்ப, திரும்ப தவறு செய்யும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது.நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வருவாய்த் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விடும். அபூர்வா பிடரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு இருப்பது, அலட்சியமாக செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜூலை 03, 2025 13:26

வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது. அந்த வழக்கு துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, ஜாமீன் ஜாமீன் என்று தள்ளிப் போகாமல் விசாரிக்கப்பட்டு, லஞ்சம் வாங்கிய அந்த உதவி கலெக்டர் உடனே பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். சஸ்பெண்ட், பணியிடை மாற்றம் போன்ற காதில் பூ சொருகும் வேலை வேண்டாம்.


Iyer
ஜூலை 03, 2025 13:13

 ஒரிசா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பிஜேபி அரசுகள் அமைந்ததால் விளைவாக: o ஆளும்கட்சியினரும், அமைச்சரவையிலும் கட்டாயம் செய்து லஞ்சம் வாங்குவது நின்றது o அரசு பணிகளில் தாமதம் இல்லாமல் நடக்கின்றன o அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது வெகுவாக குறைந்துள்ளன  கர்நாடகாவிலும், தமிழகத்திலும் பிஜேபி அரசு அமைந்தால்தான் இரு மாநிலங்களுக்கும் விடிவு ஏற்படும்


Iyer
ஜூலை 03, 2025 13:05

டி.ஜி.பி., சங்கர் பிடரி பெரிய யோக்கியனாக இருந்திருக்கமாட்டார். லஞ்சம் வாங்கி செல்வத்தை பெருக்கி கொள்ளும் வழிகளை அவர்தான் தன மகளுக்கு கற்றுக்கொடுத்திருப்பர். தந்தை மகள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து அவர்களின் சொத்துக்கள் மீது தீவிர விசாரணை செய்யவேண்டும்.


Iyer
ஜூலை 03, 2025 13:00

மாநிலத்தை ஆளும் CM & DyCM இருவருமே பெரும் ஊழல் பெருச்சாளிகள். அப்படிபட்டவர்கள் மற்றவர் மீது நடவடிக்கை எடுக்க துணிவார்களா?


சங்கர்கௌடா
ஜூலை 03, 2025 08:46

இவிங்க அப்பாரு சப்போர்ட் இல்லாம வாரிசு கலெக்டர் உருவாகியிருக்க முடியாது.


அப்பாவி
ஜூலை 03, 2025 08:45

அமைச்சரெல்லாம் ரொம்ப நல்லவங்க ஆயிட்டாங்களே


Padmasridharan
ஜூலை 03, 2025 08:33

இந்த பெண் அதிகாரி மட்டுமல்ல. சென்னை employment office லும் பெண் அதிகாரிகள் நேரத்திற்கு வருவதில்லை. நிறைய இடங்களில் இவர்கள் வருவதும் தாமதம், வந்த பிறகு மெதுவாக காலை உணவை அலுவலகத்தில் சாப்பிடுவதும் மக்களை மரியாதையில்லாமல் நடத்துவதும் உண்டு சாமி


A.Srinivasan, Trichy
ஜூலை 03, 2025 08:33

without political support these kind of crooked officials can't survive


T. சங்கரநாராயணன், ஈரோடு
ஜூலை 03, 2025 08:29

அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு பாடம்