உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுதப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு

ஆயுதப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய ஆயுதப் படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு, உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை, ஆறு மாதத்திற்குள் எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- - திபெத் எல்லை காவல் படை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு, 2021ம் ஆண்டு முதல் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

நேரடி பணியமர்த்தல்

பதவி இடங்களை மறு ஆய்வு செய்யவும், பதவி உயர்வு கோரியும், வீரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.அப்போது, மத்திய ஆயுதப்படைகளில் உயர் பதவிகள் என்பது பெரும்பாலும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் நேரடி பணியமர்த்தல் வாயிலாக நிரப்பப்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளில் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லாமல், ஒரு தேக்கநிலை நீடிப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரித்த அமர்வு கூறியுள்ளதாவது:நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை பராமரிப்பதற்கும், உள்பாதுகாப்பு கடமைகளை செய்வதற்கும் மத்திய ஆயுதப்படை வீரர்களின் பங்கு மிக முக்கியமானது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநிறுத்தும் அவர்களின் அர்ப்பணிப்பு சேவையை புறக்கணிக்க முடியாது. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் தங்கள் கடமைகளை செய்கின்றனர்.

ஆள்சேர்ப்பு

ஆனால், ஒரு சில பிரச்னைகள் காரணமாக, அவர்களால் சரியான நேரத்தில் பதவி உயர்வு பெற முடியவில்லை என்பது அவர்களது குறையாக உள்ளது. இதன் விளைவாக, பெரும் தேக்கநிலை நிலவுகிறது. இது, படைகளின் மன உறுதியை மோசமாக பாதிக்கும்.இதனால், 2021ல் நடைபெறவிருந்த பணியாளர் மறு ஆய்வை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள சேவை மற்றும் ஆள்சேர்ப்பு விதிகளை திருத்தியமைப்பது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஆலோசனை பெற்று, மூன்று மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
மே 25, 2025 08:52

பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல். சில வீரர்களா? அனைத்து வீரர்களுமா? IAS, IPS, அதிகாரிகளின் நேரடி பணியமர்த்தல் நாடு முழுவதும் அனைத்து துறைகளில் உண்டு? ஒரு சில முக்கிய பதவி தான் இந்த முறையில். மற்றவை படையின் முன் நடைமுறை பதவி உயர்வு? தேவையான என்ன சீர்திருத்த நடவடிக்கைகளை, ஆறு மாதத்திற்குள் எடுக்க வேண்டும்? அரசு நிர்வாக முறையில் நீதிபதி வழக்கின் தீர்வு அனைவரும் ஏற்கும் வண்ணம் கொடுக்க முடியாது. வழக்கும் நீதிபதிகள் கருத்தும் தான் படைகளின் மன உறுதியை மோசமாக பாதிக்கும். உள் நோக்கம் கொண்டு, தேச விரோதம் கொண்ட தனி நபர் மற்றும் வக்கீல் உண்டு?


D Natarajan
மே 25, 2025 08:18

எல்லாவற்றுக்கும் கோர்ட் தான் முடிவெடுக்க வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரகள் எதற்கு.


Kasimani Baskaran
மே 25, 2025 07:04

எல்லோருக்கும் பதவிஉயர்வு வேண்டும் என்றால் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். தகுதியை யார் முடிவு செய்வார்கள் - இட ஒதுக்கீடு... பின்னர் எப்படி வெளங்கும். பாதிக்கு பாதியாவது முழுவதும் தகுதியின் அடிப்படையில் இருக்கவேண்டும் - ஆனால் நடப்பது அதைவிட கொடுமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை