உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிர்த்தியாகம் செய்த குதிரை சவாரி தொழிலாளி: இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!

உயிர்த்தியாகம் செய்த குதிரை சவாரி தொழிலாளி: இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், பயங்கரவாதிகளுடன் போராடி உயிர் தியாகம் செய்த குதிரை சவாரி தொழிலாளி அடில் ஹூசைன் ஷா உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.பஹல்காமில், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது, அப்பகுதியில் இருந்த குதிரை சவாரி தொழிலாளியான, உள்ளூரைச் சேர்ந்த சையது அடில் ஹுசைன் ஷா என்பவர், துணிச்சலாக பயங்கரவாதிகளிடம் சண்டையிட்டு துப்பாக்கிகளை பறிக்க முயன்றார். ஆனால் அவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். சுற்றுலா பயணியரை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர் தான். தன் உயிரையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணியரின் உயிரை பாதுகாக்க நினைத்த அவருக்கு, நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அடில் ஹூசைன் ஷா உடல் அடக்கம் ஏராளமானோர் முன்னிலையில் நடந்தது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். அடில் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.உயிரிழந்த குதிரை சவாரி தொழிலாளியின் தந்தை சையத் ஹைதர் ஷா நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்ய முடியும். நாங்கள் சோகமாக இருக்கிறோம். குதிரை சவாரி தொழிலாளிகள் ஒரு பயணத்திற்கு ரூ. 200 முதல் 300 வரை சம்பாதிக்கிறார்கள். மகன் அடில் மலையேறும் போது சம்பவம் நடந்தது. இவ்வாறு சையத் ஹைதர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
ஏப் 24, 2025 19:48

உள்ளூர் ஏழை வியாபாரிகளின் அன்றாடாவாழ்க்கையில் விளையாடி விட்டனர் இந்த மந்த புத்தி நெஞ்சில் தைரியமில்லா விலங்கினத்தை விட கீழ் தரமான கோழைகள். இந்து முண்டங்களுக்கு ஆயுத சப்ளை செய்தவர்களை. மூன்றாம் இனத்தவர்களாக மாற்றி வேண்டும்.


kalyan
ஏப் 24, 2025 16:46

குதிரை சவாரி த்தொழிலாளி அதில் உஷை ஷா போன்ற ஏராளமான இஸ்லாமியர்கள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவர்கள் வன்முறை செய்யும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிராக குரல் கொடுக்க முந்தைய காலங்களில் தங்கியிருக்கிறார்கள் அந்த நிலை இப்போது காஷ்மீரில் முற்றிலுமாக மாறியிருப்பது, 370 ஷரத்து நீக்கப்பட்டதிலிருந்து கடந்த 5 வருடமாக காஷ்மீரில் வந்துள்ள பொருளாதார முன்னட்டைவால் , அனைத்து மதங்கள் சார்ந்த அமைப்புக்களும் இந்த தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததிலிருந்து தெரிகிறது . இதேபோல் எல்லா மாநிலங்களும் மத பேதமின்றி வன்முறைக்கு எதிராக அதிகம் வன்முறை செய்வது மிக குறைந்த எண்ணிக்கையிலுள்ள இஸ்லாமிய தீவிர வாதிகள் தான் குரல் கொடுக்க முன் வந்தால் , எல்லா ஹிந்துக்களும் இஸ்லாமியர்களை தங்கள் உடன் பிறந்தவர்களாகவே கருதுவார்கள் . தினமலருக்கு ஒரு வேண்டுகோள் : ஒரு நன்கொடை நிதி அமைத்து வாசகர்களின் பங்கு கேட்டு வாங்கி இந்த குதிரைச்சவாரி தொழிலாளியின் குடும்பத்துக்கு அளித்தால் எத்தனை ஹிந்துக்கள் அதற்கு நன்கொடை செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வரும்


மூர்க்கன்
ஏப் 24, 2025 16:03

என்னப்பா இந்த பக்கமே காத்தாடுது?? ஓஹோ வெறிகொண்டு கிழிக்க அந்தப்பக்கம் கிளம்பிட்டானுங்களோ?? சின்ன ஆறுதல் கொஞ்ச பேராவது நல்லவர்களுக்கு மரியாதையை செய்றாங்களே?? அதுவே போதும்.


Kumar Kumzi
ஏப் 24, 2025 18:26

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய பிச்சைக்கார மூர்க்கனுக்கு இந்தியாவில் என்ன வேலை


ராஜ்
ஏப் 24, 2025 15:43

என்னது சவாரிக்கு, 200-300 அங்க, 2000-3000 கேக்கறாங்க


Rajarajan
ஏப் 24, 2025 15:32

தலை வணங்குகிறேன். இவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.


Velan Iyengaar
ஏப் 24, 2025 14:31

இந்த தொழிலாளிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இதுபோன்ற முஸ்லிம்கள் தான் பெரும்பாலான முஸ்லிம்கள்.. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்கள் மிக சிறுபான்மை எண்ணிக்கையில் தான் என்பதை பெரும்பான்மை ஹிந்துக்கள் உணருவார்களா ???


Krishnamurthy Venkatesan
ஏப் 24, 2025 17:24

அந்த சிறுபான்மை தீவிரவாத செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களை பெருவாரியான அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பதில்லை மாறாக அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.


Veeraputhiran Balasubramoniam
ஏப் 24, 2025 13:53

அந்த சகோதரருக்கு நன்றி அஞ்சலி செலுத்துகிறேன், மேலும் அவர் குடும்பத்தினருக்கும் எனது நன்றியினையும் ஆழ்ந்த இரங்கலையும் பணிவொடும் அன்போடும் தெரிவிக்கிறேன்


Veeraputhiran Balasubramoniam
ஏப் 24, 2025 13:50

உண்மையான இஸ்லாமியர்கள் இவர போலவே உள்ளார்கள், நமக்கு பல நெருங்கிய இஸ்லாமிய குடும்ப நண்பர்கள் இது போன்றவர்க்ளின் செயல் பற்றி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இது போன்ற தீவிர வாதிகளின் செயலால் நம்முன் கூனி குறுகி உள்ளார்கள் வீட்டில் முடங்கியவர்களும் உள்ளனர்.. ஒவ்வொரு முறை இது போன்ற நிகழ்வுகள் பற்றி அரசியல் வாதிகளால் ஊடகங்க்களில் வாக்கு அரசியலுக்காக நடு நிலை தவறி இஃப்தார் விருந்தில் நடிப்பது போல் உண்மையய் வெளிப்படையாக விவாதிக்காமல் வாக்கு அரசியலுக்காக விவாதிக்கும் போது நமக்கு அந்த நல்லவர்கள் மீது பரிதாபமே ஏற்ப்படுகிறது


SANKAR
ஏப் 24, 2025 13:46

must give his family big financial compensation. if it happens publish the news


VSMani
ஏப் 24, 2025 13:38

இவரது குடும்பத்துக்கு அரசு வேலை கொடுக்கவேண்டும்.


புதிய வீடியோ