உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு

இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு

பனாஜி: ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய கடற்படையும் இணைந்து இருந்தால், பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் ,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை அதிகாரிகள் மத்தியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wevkxigj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் மற்றும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.* சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் விளையாடி வரும் ஆபத்தான பயங்கரவாத விளையாட்டு இப்போது முடிந்துவிட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.* பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாத சக்திகளை எதிர்கொள்ள அனைத்து வழிகளிலும் இந்தியா செயல்படும்.* பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.பாகிஸ்தானால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவற்றைப் பயன்படுத்தத் இந்தியா தயங்காது.* பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை அவர்களே அழிப்பது அந்நாட்டிற்கு நல்லது.* ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதலாகும்.* பாகிஸ்தான் உலகளவில் மன்றாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.* கடந்த 1971 ல் இந்திய கடற்படை போரில் ஈடுபட்ட போது, பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக பிரிந்ததை நாம் பார்த்தோம். தற்போது, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால், பாகிஸ்தான் இரண்டாக அல்ல, நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Narayanan L
மே 30, 2025 20:35

சரியான எச்சரிக்கை


Rathna
மே 30, 2025 20:29

இது டாக்ட்டிகல் வார் என்ற வகையை சேர்ந்தது. பாகிஸ்தானுக்கு 270000 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை உண்டாக்கி விட்டு வெளியேறியது தான் நல்லது. நவீன கால போரில் போரை இழுத்து அடிப்பது நமது பொருளாதாரத்திற்கும் மக்கள் உயிர் இழப்பிற்கு நல்லதல்ல. உதாரணமாக இன்னும் 3 நாள் போரை மோடி தொடர்ந்து இருந்தார் என்று வைத்து கொள்வோம். பாக்கிஸ்தான் தனது தரை படையை ஜம்மு மற்றும் ரஜௌரி போன்ற பகுதிகளுக்கு நகர்த்தும். அதனால் சில நூறு வீரர்களை நாம் இழக்க வேண்டி இருக்கும். அதனால் ஏற்படும் பொருளாதார பல ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் உயிர் இழப்புகளை நம்மால் ஏற்று கொள்ள முடியாது. இப்போது போரை தொடர வேண்டும் என்று பேசுபவர்கள், அப்போது வேறு விதமாக பேசுவார்கள்.


Saai Sundharamurthy AVK
மே 30, 2025 20:25

ராஜ்நாத்சிங் சொல்வது முற்றிலும் உண்மை. பாகிஸ்தானில் ரகசியமாக நிறுவப்பட்டிருந்த அமெரிக்காவின் அணு ஆயுத கிடங்கு இருக்கும் சுரங்கத்தை இந்தியா தாக்கி அழித்ததால் அமெரிக்கா திடீரென்று தலையிட்டு போரை நிறுத்தி விட்டது. அந்த சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்கர்களின் நிலை என்ன ஆனது என்பது பற்றி அமெரிக்கா இதுவரை எதையும் தெரிவிக்க வில்லை. அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஷயத்தை வெளியில் சொன்னால் அமெரிக்காவுக்கு அவமானம். டபுள் கேம் ஆடியது உலகிற்கு தெரிந்து விடும். பின்பு எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நமது விமனப்படையும் அது பாகிஸ்தானுடையது என்று நினைத்து தான் தாக்கியிருக்கிறது. ஆனால், இப்படி ஒரு ட்விஸ்ட் வெளி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. உலக நாடுகளே கொஞ்சம் ஆடிப் போய் தான் உள்ளது.


Samy Chinnathambi
மே 30, 2025 18:25

கொஞ்சம் அங்கிட்டு போயி விளையாடுங்க.


naranam
மே 30, 2025 18:20

இந்தியா அதை தான் செய்திருக்க வேண்டும். எதிரி நாடான பாகிஸ்தான் மீண்டும் தலையெடுக்கா வண்ணம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதற்கு நாம் வரும் காலங்களில் வருத்தப்படப் போவது நிச்சயம். இன்று இந்திரா காந்தி இப்படிச் செய்திருக்கவேண்டும் அப்படிச் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் மக்கள் பேசுவது போல வரும் காலங்களில் மோடி இப்படிச் செய்யாமல் விட்டது மாபெரும் தவறு என்று மக்கள் நிச்சயம் கூறுவார்கள். பாகிஸ்தானை ஒரு பல் பிடுங்கிய பாம்பு போல இந்திய ராணும் ஆக்கிவிடத் துடித்த போது மோடி அரசு அதைத் தடுத்தது பெரும் பிரச்சனையாக மீண்டும் வெடிக்கப் போவது உறுதி. அவ்வளவு தீவிரமானது பாகிஸ்தானின் மத வெறி.


Narayanan Muthu
மே 30, 2025 19:47

எல்லாப்புகழும் trumpukke


venugopal s
மே 30, 2025 17:50

இதை வைத்தே இப்படியே உருட்டி உருட்டி அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம்!


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 30, 2025 19:35

மூர்க்ஸ் வலிக்குதா


ramesh
மே 30, 2025 17:49

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை இந்தியா கைப்பற்ற நல்ல வாய்ப்பு அமைந்தது .டிரம்ப் மதியஸ்தத்தை செவிசாய்க்காமல் இருந்து இருந்தால் நமது ராணுவத்தினர் நிச்சயம் கைப்பற்றி இருக்கும் . நல்ல வாய்ப்பு பறிபோய் விட்டது


ஆரூர் ரங்
மே 30, 2025 19:06

ஆக இங்கே ஏற்கனவே உள்ள மூர்க்க தொகை போதாது .POK ஆக்கிரமிப்பு காஷ்மீர் மூர்க்க கூட்டத்தையும் இங்கே சேர்க்கணும்?


Gnana Subramani
மே 30, 2025 17:14

ஏன் பண்ணவில்லை. டிரம்ப் குரல் கொடுத்ததும் நிறுத்தி விட்டீர்களா


Arunkumar,Ramnad
மே 30, 2025 20:16

முதலில் உன்னைப் போன்ற உள்நாட்டு துரோகிகளை களை எடுக்க வேண்டும்.


mluxman
மே 30, 2025 17:10

அப்படி இல்லை என்றல் நீங்கள் நேரில் பார்த்ததை சொல்லவும் மத்திய அரசு சொல்வதெல்லாம் பொய் என்றல் நீங்கள் கண்டு பிடித்த விஷத்தை சொல்லுங்கள்


SUBBU,MADURAI
மே 30, 2025 16:46

Pakistani PM: India attacked and destroyed several of our airbases. Pakistani Army Chief: India attacked and destroyed several of our airbases. Indian Army: We attacked and destroyed several Pakistani airbases. Congress ecotem: No attack took place.