உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பான்சுரி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பான்சுரி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடில்லி:பா.ஜ., - எம்.பி., பான்சுரி ஸ்வராஜ் மீது, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த அவதூறு மனுவை விசாரணைக்கு எடுப்பது குறித்து, நீதிமன்றம் நாளை முடிவு எடுக்கிறது.கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி, 'டிவி' சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பான்சுரி, தனக்கு எதிரான அவதூறாக பேசியதாக, சத்யேந்திர ஜெயின் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல், முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட மிட்டல், விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா? தள்ளுபடி செய்வதா என நீதிபதி என்று நாளை முடிவு எடுப்பார் என தெரிகிறது.ஜெயின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியபோது, 3 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பான்சுரி கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை