உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் முன் பாய்ந்து பெற்றோர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து பெற்றோர் தற்கொலை

ராய்ச்சூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ரயில் முன் பாய்ந்ததில் பெற்றோர் பலியாயினர். கை எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில், சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.ராய்ச்சூர் நகரின் ஜோதி நகரை சேர்ந்தவர்கள் முகமது சமீர், 45, ஜுலேகா பேகம், 40. இவரது மகள் மைமுலா, 13. நேற்று மூவரும், தற்கொலை செய்யும் எண்ணத்தில், ரயில் முன் பாய்ந்தனர். ரயில் மோதி மூவரும் துாக்கி வீசப்பட்டு, பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர்.இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது, முகமது சமீர், ஜுலேகா பேகம் ஆகியோர் உயிரிழந்திருந்தனர். மகள் மைமுலாவின் கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார்.சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மைமுலாவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எதற்காக தற்கொலைக்கு முயற்சித்தனர் என்பது தெரியவில்லை.சிகிச்சை பெற்று வரும் மைமுலாவிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை