மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டத்தின் பதானிநகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் மாதோ. இவருக்கு குஷி குமாரி, 17, என்ற மகள் இருந்தார். இவரது வங்கிக் கணக்கில், 6 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக சேமித்து வைத்திருந்தார்.அந்த பணம் முதிர்ச்சி அடைய இருந்த நிலையில், வங்கியில் இருந்து பணத்தை உடனே எடுத்து தரும்படி குஷி குமாரியிடம் மாதோ மற்றும் வளர்ப்பு தாய் பூனம் தேவி ஆகியோர் கேட்டுஉள்ளனர். அவர் பணத்தை எடுத்து தர மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதோ, பூனம் தேவியுடன் சேர்ந்து கடந்த 13ல் குஷியை கொலை செய்தார். பின், உடலை துாக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர்.இது தொடர்பாக குஷியின் சகோதாரருக்கு சந்தேகம் எழுந்தது. போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தந்தை மாதோ, வளர்ப்பு தாய் பூனம் தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மோகன் சி லாசரஸ் குறித்து வீடியோ வெளியிட்டவர் கைது
துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நாலுமாவடியில் மதபோதகர் மோகன் சி லாசரஸ் 'இயேசு விடுவிக்கிறார்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இடையன்குடியை சேர்ந்த சார்லஸ் 42, என்பவர் தற்போது சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரில் வசித்து வருகிறார். அவர் தமது யூடியூப் சேனலில் மோகன் சி.லாசரஸ் குறித்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். இது குறித்து மோகன் சி.லாசரஸ் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. குரும்பூர் போலீசார் சார்லசை கைது செய்து துாத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.மணிப்பூரில் மீண்டும் தாக்குதல்; 2 வீரர்கள் மரணம்
மணிப்பூரில் தெங்னோபால் மாவட்டத்தின் மோரே நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினரின் முகாம் மற்றும் அவர்களின் வாகனங்களின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதல் சம்பவத்தில், ரிசர்வ் படையைச் சேர்ந்த வாங்க்ஹெம் சோமார்ஜித் என்ற வீரர், வீரமரணம் அடைந்தார். இவர், மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் மாலோம் நகரைச் சேர்ந்தவர். தொடர்ந்து நடந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஒரு பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.ஓ.பி.எஸ்., தம்பி மீது புகார்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அ.தி.மு.க., கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக அ.தி.மு.க.,வினருக்கும் பன்னீர்செல்வம் அணியினருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., நகரச்செயலாளர் பழனியப்பன் பெரியகுளம் போலீசில் அளித்த புகாரில், 'முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவிற்கு அ.தி.மு.க., சார்பில் அனுமதி பெற்று விழா நடந்தது. அங்கு ஓ.சண்முகசுந்தரம்(பன்னீர்செல்வம் தம்பி) தலைமையில் வந்த அப்துல்சமது, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட சிலர் அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் ராமர், முன்னாள் எம்.பி., பார்த்திபன் உள்ளிட்டோரை தகாத வார்த்தையால் திட்டி, கட்சி கொடிஏற்ற முயற்சித்தனர். தடுத்த எனக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது. பன்னீர்செல்வம் அணி நகர செயலாளர் அப்துல்சமது சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சேமங்கி பெரியார் நகரைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள், 90. அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள், 80. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேமங்கியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது, மரவாபாளையம் மதுரை வீரன்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் குணசேகரன், 19, ஓட்டிய பைக் இருவர் மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி செல்லப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசாரை தாக்கி விட்டு தப்பிய வடமாநில வாலிபர் கைது
திருநெல்வேலி ஜங்ஷன் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் ஜன.,13 இரவு ரோந்து சென்றனர். பாலபாக்யா நகர் பகுதியில் ஒரு டூவீலரில் சென்ற மூன்று பேர் அங்கு பூட்டப்பட்டிருந்த கடையின் ஷட்டரை உடைத்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அந்த கும்பல் இரும்பு கம்பி மற்றும் கற்களால் போலீசாரை தாக்கி விட்டு தப்பினர். இதில் எஸ்.ஐ. நாராயணன், போலீஸ் சரவணபிரகாஷ் ஆகியோர் காயமடைந்தனர்.அந்த கும்பல் வட மாநிலத்தவர்கள் எனவும் வள்ளியூர், பணகுடி வட்டாரத்திலும் இதேபோல கடைகளின் ஷட்டர்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஜன.,15 இரவு தூத்துக்குடி சத்திரம் தெருவில் ஒரு டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து ஒரு லட்சம் ரூபாய், மது பாட்டில்களை சிலர் திருடிச் சென்றனர். சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தபோது அதிலும் வட மாநில நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடியில் போலீசாரை கண்டதும் ஐந்து பேர் கும்பல் தப்பி ஓடியது. ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராகுல்சிங் மகன் ராய்சிங் 28, என தெரியவந்தது. அண்மையில் தமிழகம் வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்
8 hour(s) ago | 2
8 hour(s) ago