உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரிஸ் ஒலிம்பிக்: ஆயுதப்படை பெண்கள் முதல் முறையாக பங்கேற்பு

பாரிஸ் ஒலிம்பிக்: ஆயுதப்படை பெண்கள் முதல் முறையாக பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஆயுதப்படை பெண்கள் பிரிவை சேர்ந்த இருவர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து கூறப்படுவதாவது: பாரிஸ் ஒலிம்பிக் 2024- வரும் 26-ம் தேதி துவங்கி ஆக., 11-ம் தேதி உடன் நிறைவடைகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் சார்பிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சுமார் 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் சுமார் 24 பேர் ஆயுதப்படை பிரிவை சேர்ந்தவர்களாவர். இதில் ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரான நீரஜ்சோப்ரா உள்ளிட்ட 22 ஆண்களும் 2 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள இரண்டு பெண்களில் ஒருவர் ஹவில்தார் ஜெய்ஸ்மின் போரியா மற்றும் சிபிஓ ரீத்திகா ஹூடா ஆகியோர் மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்கின்றனர். 2022 காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் ஜெய்ஸ்மின் 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் ரீத்திகா பாதுகாப்பு பிரிவில் இடம் பெற்றுள்ள 24 வீரர்களை தவிர ஐந்து அதிகாரிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க பாரீஸ் செல்லஉள்ளதாக கூறப்படுகிறது. 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் . கடந்த போட்டியை காட்டிலும் கூடுதல் பதக்கங்கள் பெறுவர் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி