உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛வலிமையுடன் திரும்பி வாருங்கள் ‛ : வினேஷ் போகத்திற்கு பிரதமர் ஆறுதல்

‛வலிமையுடன் திரும்பி வாருங்கள் ‛ : வினேஷ் போகத்திற்கு பிரதமர் ஆறுதல்

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வினேஷ் போகத் நீங்கள் சாம்பியனுக்கு எல்லாம் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகமாக திகழ்கிறீர்கள். இன்றைய பின்னடைவு மனவேதனை அளிக்கிறது. இந்த விரக்தியின் உணர்வை வெளிப்படுத்த விரும்பவில்லை. அதேநேரம் நீங்கள் மீண்டும் எழுந்து வருவீர்கள் என்று எனக்கு தெரியம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்களின் இயல்பு. வலிமையுடன் மீண்டு வாருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ua20d9w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பி.டி.உஷாவிடம் பேச்சு

தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும், வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் என்ன என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஆக 07, 2024 15:11

பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே. பிஜெபி ஆட்சியைத் திட்டி போராட்டம் நடத்தியும் இவரைப் பாராட்டிய மோதிஜி மனிதருள் நிஜமான மாணிக்கம்.


Swaminathan L
ஆக 07, 2024 14:08

முன்பு 53 கிலோ பிரிவில் போட்டியிட்டவர் இந்த முறை 50 கிலோ பிரிவுக்கு மாறினார். விதிகளின்படி 52 கிலோ வரை மட்டுமே அவர் உடல் எடை இருக்கலாம். நேற்று முதல் நாள் போட்டியின் போது 52 கிலோவுக்குக் குறைவாக இருந்த உடல் எடை இன்று 52 கிலோ கடந்து கூடுதலாக 100 கிராமும் இருந்ததால் அவர் போட்டியிட தடை ஏற்பட்டது. உடல் எடை குறைப்புக்காக அவர் தண்ணீர், உணவு அவ்வளவாக அருந்தாததால் உடல்நலக் குறைவு உண்டாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்.


நேசன்
ஆக 07, 2024 17:26

சொல்லு


செந்தமிழ் கார்த்திக்
ஆக 07, 2024 13:50

பிரதமர் கூறிய வார்த்தைகள் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும் அரசியல் தலையீடு இருக்குமோ என்று எதோ மனதில் தவறாக படுகிறது.


hari
ஆக 07, 2024 18:09

உம்மை போல சிலரின் மூளைக்கு எட்டாது..... என்ன செய்வது


Narayanan Muthu
ஆக 07, 2024 18:21

இந்திய மக்களின் பெரும்பான்மையானவர்கள் கருத்தும் இதுதான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை