உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூடியது பார்லிமென்ட்; லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு

கூடியது பார்லிமென்ட்; லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அதானி விவகாரம், தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால், இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,03) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில், அதானி விவகாரம், தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர்.ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி தராத காரணத்தினால், இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.,க்கள் தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பேசினர். தமிழக எம்.பி., வைகோ பேசியதாவது: புயல் மழை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்புகளை கணக்கிட உடனடியாக உள்துறை அமைச்சகம் குழுவை அனுப்ப வேண்டும். பெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. புயல், மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

RAVINDRAN.G
டிச 03, 2024 19:19

ஏதாவது தெரிந்தால்தானே பேசுவார்கள் . கான்டீன் போண்டா பஜ்ஜி சாப்பாடு தான் முக்கியம். நாட்டு நலமா முக்கியம் . அடுத்த தேர்தலுக்கும் இவர்கள்தான் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் . வழக்கம் போல கான்டீன் கூச்சல் குழப்பம் அவ்ளோதான் .


kalyanasundaram
டிச 03, 2024 17:55

CENTRAL GOVT. MUST PASS ALL BILLS THOSE ARE GOOD FOR PEOPLE


Nandakumar Naidu.
டிச 03, 2024 15:05

அப்படியே நிரந்தரமாக போய்விடுங்கள். வராதீர்கள்.


Thiagu
டிச 03, 2024 14:39

பாஸ் ராவுள் ரொம்ப நல்லவர், 2023 ல ஹிண்டன்பெர்க் ரிப்போர்ட் வெச்சி பார்லிமென்ட் முடக்கி அதானி போர்ட்ஸ் 480 வந்துச்சி, இப்போ 1205 நல்ல லாபம், அதே மாதிரி போன வாரம் அதானி க்ரீன் 900 திக்கு வாங்கினேன் இப்போ 1300 தாண்டிடுச்சி, வாழ்க ராவுள், அவரு எதை செய்தாலும் அதுக்கு ஆப்போசிட் ஆ போவுது, அவருக்கு கட்டம் மோசம்


Rajan
டிச 03, 2024 14:06

சம்பளம் எல்லாம் எதற்கு? மக்கள் பணத்தை வீணடிக்கிறார்களே? இதுக்கு புண்ணாக்கு கொடவுனிலே இருந்திருக்கலாம்


Sathya
டிச 03, 2024 13:57

TN elected MPs only for eating Masala Vada and Tea.


lana
டிச 03, 2024 13:56

இப்படி தவணை முறையில் செய்வதற்கு மொத்தம் ஆக செய்யுங்கள். இன்னும் 10 நாள் கத்துவது என்று சொல்லுங்க. அவர்கள் வேலை ஆவது செய்வார்கள்


Rengaraj
டிச 03, 2024 13:53

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர், கோடைகால கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்காலகூடத்தொடர் என்று நான்கு தொடர்கள் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் சிறப்பு கூட்டத்தொடர் நடக்கும். இவற்றில் நாட்டின் அனைத்து மாநிலங்களின் பிரச்சினைகளையும் விவாதம் செய்து தீர்வு காண்பது கடினம். ஒவ்வொரு விஷயத்துக்கும் விவாதம் கட்டாயம் என்று ஆகிவிட்டால், பாராளுமன்றம் ஆண்டின் அனைத்துநாட்களிலும் கூட்டப்படவேண்டும். லோக்சபா , ராஜ்ய சபா எம்பிக்கள் ஒவ்வொருவரும் பத்துநிமிடங்கள் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலே அனைவரும் ஒருதடவை பேசுவதற்கு கிட்டத்தட்ட 132 மணிநேரம் ஆகிவிடும். அதற்குமட்டுமே 15 நாட்கள் ஆகலாம். அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே சட்டம் இயற்றுதலையே இங்கு முக்கிய விவாத பொருளாக எடுத்துக்கொள்ளவேண்டும். நாட்டின் மற்ற பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைத்து குழுவின் அறிக்கையின் பேரில் விவாதம் நடத்தி தீர்வுகாண வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பெருமளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. அனைத்தும் மக்களின் வரிப்பணம். இதை உறுப்பினர்கள் அனைவரும் புரிந்து செயலாற்றவேண்டும்.


hari
டிச 03, 2024 13:36

போனதும் பார்லிமென்ட் நல்ல ...


Sundar R
டிச 03, 2024 13:36

தமிழகத்தில் அரசியல்வாதிகள் நடத்தும் 90% டிவி சேனல்களில் பெஞ்சன் புயலால் மக்களுக்கு சிறிய பாதிப்பு கூட இல்லை என்று இரண்டு நாட்களாக காண்பித்தார்கள். இப்போது பாராளுமன்றத்தில் இதே அரசியல்வாதிகள் இதற்கு எதிர்மாறாக பெஞ்சன் புயலால் சேதம் என்று காட்டுக்கூச்சல் போட்டு பாராளுமன்ற செயல்பாடுகளை முடக்குகிறார்களே எம்பிக்களை அவையிலிருந்து வெளியேற்றம் செய்யலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை