உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை இதற்கு முன் பார்த்தது இல்லை: இண்டி கூட்டணியை கண்டித்த மத்திய அமைச்சர்

இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை இதற்கு முன் பார்த்தது இல்லை: இண்டி கூட்டணியை கண்டித்த மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்தது இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து பார்லி. கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், இன்று, இண்டி கூட்டணிக் கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி தடையை மீறி,பேரணி சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k0njdqc3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவே, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.இந் நிலையில், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு பொறுப்பற்றதாக இருப்பதாக மத்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பார்லி. விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; இவர்களுக்கு (இண்டி கூட்டணி) அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. எப்படி இருந்தாலும் ஒரு கட்சி, ஒரு குடும்பம் அல்லது தனி நபர் செய்வதை எல்லாம் அரசியலமைப்பாக கருத முடியாது. நாங்கள் ஜனநாயகத்தை கொண்ட கட்சியில் இருந்து வந்திருக்கிறோம். ஆனால், ஜனநாயக நாட்டில் அவர்கள் அரசியலமைப்பை நம்புவது இல்லை. இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்தது இல்லை. சுப்ரீம்கோர்ட், பார்லிமென்ட் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. நமது அரசியலமைப்பை மட்டுமே விமர்சிக்கிறார்கள். தினமும் அவர்கள் ஏன் இந்த நாடகம் ஆடுகின்றனர்? ஏராளமான மசோதாக்கள் பார்லி.யில் பட்டியலிடப்பட்டு உள்ளன. எங்களால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

R.RAMACHANDRAN
ஆக 12, 2025 09:01

இந்த நாட்டில் இந்திய அரசமைப்பின்படி எந்த அதிகார அமைப்பும் செயல்படவில்லை. ஆளுக்கு தகுந்தாற் போல செயல்படுகின்றன. அப்படியிருக்க அரசமைப்பு நூலை புனித நூலாக போற்றுவதால் என்ன பயன்.


Sivakumar
ஆக 11, 2025 21:10

நீங்க எதிர்க்கட்சியை இருந்தப்போ ஒரு அமைச்சர் மீது குற்றம்சாட்டப்பட்டாலே அவர் ராஜினாமா செயும்வரை அமளிதுமளி செய்த 2013 எதிர்க்கட்சியை நீங்க பாத்ததேயில்லை


தமிழ்வேள்
ஆக 11, 2025 20:17

பொறுப்பு இல்லாமல் வளர்க்கப்பட்டதனால்தான் இன்று பப்பு அண்டை தண்ணீர் தெளித்து விடப்பட்ட தறுதலையர் ஆக தெருத்தெருவாக...ஹி..ஹி...நாடு நாடாக திரிகிறார்?...ஆனால், கூட போறது யாருன்னு மட்டும் கேட்டுறப்படாது...புரிஞ்சுதோ?


பேசும் போது
ஆக 11, 2025 19:37

நாங்கள் வெற்றி பெற்றால் அது மக்கள் தீர்ப்பு.... ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் அது EVM முறைகேடு.... இது தான் இண்டி கூட்டணி ஆட்களின் புலம்பல்.


Sivakumar
ஆக 11, 2025 21:15

ஒரு ஒட்டு குறைத்தாலும் குற்றம் குற்றம் தான்.ஆனாலும் தோல்வியுற்றால் சேதாரம் அதிகம், அதைத்தான் முதலில் சொல்லுவார்கள். ஜெயித்தால், வெற்றியின் விகிதாச்சாரம் குறைந்துள்ளதுனு சொல்ற அளவுக்கு அவங்களுக்கு backup அம்பானியோ அதனியோ இல்லை. So they are prioritizing loses first and pointing out malpractices that caused them to lose than simply calling every malpractice by the fraud gangs with deep pockets. இது கூட புரிந்துகொள்ள முடியாத மாதிரி நடிக்கவேண்டாம்


Sivakumar
ஆக 12, 2025 09:03

ஒரு ஒட்டு குறைத்தாலும் குற்றம் குற்றம் தான்.ஆனாலும் தோல்வியுற்றால் சேதாரம் அதிகம், அதைத்தான் முதலில் சொல்லுவார்கள். ஜெயித்தால், வெற்றியின் விகிதாச்சாரம் குறைந்துள்ளதுனு சொல்ற அளவுக்கு அவங்களுக்கு backup அம்பானியோ அதனியோ இல்லை.


பேசும் தமிழன்
ஆக 11, 2025 19:35

இண்டி கூட்டணி ஆட்கள் எல்லோரும் நாட்டுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள்..... அவர்களின் செயல் நாட்டுக்கு நன்மை தருவதாக இருக்காது. நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்தால் அவர்களுக்கு பொறுக்காது !!!


Rathna
ஆக 11, 2025 18:39

பங்களாதேஷிகளை வோட்டு லிஸ்டில் இருந்து எப்படி தூக்கலாம் என்பது தானே இவர்களின் பிரச்சனை மற்றும் கேள்வி??


Iyer
ஆக 11, 2025 18:22

நாட்டை ஆள தகுதி இல்லை - என்பதால் மக்கள் குடும்பக்கட்சிகளை நிராகரித்தார்கள் பொறுப்புள்ள எதிர்கட்சிகளாகவும் செயலாற்ற எங்களுக்கு வக்கில்லை என காட்டிவருகிறார்கள் அடுத்த தேர்தலில் இவர்களை மக்களே பாராளுமன்றத்தில் நுழைய விடாமல் விரட்டுவார்கள்


KOVAIKARAN
ஆக 11, 2025 18:19

எதிர்க்கட்சித் தலைவர்களில் பலர் பெயிலில் உள்ளார்கள். மேலும் பெயில் நிபந்தனைகளை அடிக்கடி மீறுகிறார்கள். எனவே அவர்களது பெயிலை ரத்து செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட வழக்குத் தொடர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதுமட்டுமல்ல, ராகுல் பப்பு ராகுல் கானின் குடியுரிமையைப் பற்றியும் வழக்குப் பதிவுசெய்து அவர் இந்திய பிரஜையா அல்லது பிரிட்டிஷ் பிரஜையா என்பதை தெளிவு படுத்தவேண்டும். அதன் பின் அதற்கேற்ப உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


guna
ஆக 11, 2025 18:05

வடிவேலு படத்தில் வரும் மாங்காய் மன்னர் போல போருக்கு சென்றால் கரடியே காரி துப்ப போகுது....நல்ல தமாசு


தஞ்சை மன்னர்
ஆக 11, 2025 17:28

நீங்கள் கொண்டு வந்து இருக்கும் சட்டங்கள் யாவும் ஒரு நாள் அகற்றப்பட்டு புதிய இந்திய ஒளிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை