குவைத்தில் 13 மணி நேரமாக சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள்; இணையத்தில் வீடியோ வைரல்!
புதுடில்லி: மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானம் குவைத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 13 மணி நேரமாக இந்திய பயணிகள் அவதி அடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த இந்திய பயணிகள் 13 மணி நேரமாக அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பயணிகள் உணவுகள், தங்குமிடம் இல்லை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது குறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தூதரக அதிகாரிகள் விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளனர். பயணிகள் விமான நிலையத்தில் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 'நாங்கள் அனைவரும் பணிக்கு செல்ல வேண்டும். இங்கிலாந்தில் எங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்' என பயணி ஒருவர் தெரிவித்தார்.