உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரதத்தை முடித்தார் பவன் கல்யாண்: திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று தரிசனம்

விரதத்தை முடித்தார் பவன் கல்யாண்: திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருமலை: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட 11 நாள் விரதத்தை முடித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரையாக நேற்று சென்றார்.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இது நடந்ததாக, தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் குற்றஞ்சாட்டியிருந்தார். இதை உறுதி செய்து, திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wxvojnnb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கும் வகையில், 11 நாட்கள் விரதமிருந்து ஏழுமலையானை தரிசிக்கப் போவதாக துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அறிவித்திருந்தார். அதன்படி, விரதத்தின் நிறைவு நாளான நேற்று, தன் மகள்கள் ஆத்யா மற்றும் பலினி அஞ்சனி ஆகியோருடன் அவர் திருப்பதிக்கு சென்றார். அலிபிரி மலைப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்ட பவன் கல்யாணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஆங்காங்கே சிறிது நேரம் அமர்ந்தபடியே திருமலை சென்றடைந்தார்.ஹிந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் திருமலையில் ஏழுமலையானை வழிபட, நம்பிக்கை பிரமாண பத்திரம் வழங்குவது அங்கு நடைமுறையில் உள்ளது. பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவா வெளிநாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்த பலினி அஞ்சனி மாற்று மதத்தவர் என்பதால், கோவிலில் தரிசனம் செய்வதற்கு முன், தேவஸ்தான அலுவலகத்துக்கு சென்று அது தொடர்பான பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார்.அவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், பவன் கல்யாணும் தன் மகளின் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார். அதன் பின் அவர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தனர். முன்னதாக, கடந்த வாரம் திருமலைக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஹிந்து அல்லாதவர் என்பதால் அவரை பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட பா.ஜ., வலியுறுத்தியது. இதையடுத்து, தன் திருமலை பயணத்தை அவர் ரத்து செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

RAJ
அக் 04, 2024 01:26

அட நம்ம பகுத்தறிவு பகளவுரு.. என்ன பீலா உடறான் பார்ரா.. பேர மாத்துட டேய். ..


Rajinikanth
அக் 06, 2024 23:18

அட ராஜ் சொல்லிடாருப்பா, எல்லாரும் கேட்டு நடந்துக்கோங்க. ஏன்னா இவரு தான் இங்க பெரிய ...பாருங்க


Kasimani Baskaran
அக் 03, 2024 19:35

அமேசான் இந்தியா விலை அமுல் 1 லிட்டர் 750. இதில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு விற்பது இடிக்கவில்லை போல.


பாமரன்
அக் 04, 2024 14:15

மேதகு காசி அவர்களே... சென்ற வாரம்தான் பிளிப்கார்ட்டில் அமுல் நெய் 559 ரூபாய்க்கு வாங்கினேன்... அதன் MRP கூட 650 தான்.. GST இருந்தால் இன்னும் விலை கம்மி.. இது ஒரு லிட்டர் விலை... டன் கணக்கான்னா... புரியும்னு நினைக்கிறேன்... புரியலன்னா பக்கோடாதான்... டோண்டோய்ங்...


Ramesh Sargam
அக் 03, 2024 11:33

ஆக ஒருவழியாக திருப்பதி லட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது. லட்டு எடு, தின்னு, கொண்டாடு.


Ramesh Badmakesavan
அக் 03, 2024 10:15

Whatever has happened is in the past, and karma will eventually come back to those responsible for the mistakes. Its truly unfortunate that the Thirumalai Devasthanam did not conduct proper audits or verifications during the procurement process. They should have an internal lab to the quality of incoming products as part of their verification procedures. Food safety is also crucial, especially since the food is distributed to millions of devotees. What about the temple offerings that are also provided to all the devotees? The current Naidu government in Andhra Pradesh is also responsible for this issue. He cannot simply point fingers at others. As for Pawan Kalyan, what he is doing seems like a political stunt aimed at strengthening his position in the current government and securing his future political career.


VENKATASUBRAMANIAN
அக் 03, 2024 08:30

திரையுலகில் இவர் ஒருவராவது ஆத்திக சிந்தனையுடன் வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள் போல் இரட்டை வேடம் போடவில்லை.


RAJ
அக் 03, 2024 08:22

சூப்பர்ஸ்டார் பேர்ல கருத்து சொன்ன, கருத்து கந்தசாமி, & ஏழுமலையான் பேர வெச்சுகிட்டு இருக்கிற லட்டுசாமி , மூளையை கழுவி காயப்போட்டு, திருப்பி மாட்டிப்பாரு, ஒர்க் பண்ணலாம் பண்ணும்.. . கருங்காலிகளா ..


Rajinikanth
அக் 03, 2024 11:15

சில கருத்துக்களை சொல்லி சங்கிகளுக்கு சுர்ரென்று ஏற வைத்து பார்ப்பதிலும் ஒரு அலாதி தான். ஏன் யா, சங்கிகளுக்கு எதிராக ஏதாவது சொன்னாலே அவன் திமுக தானா? ஏன் தமிழ்நாட்டில் வேறு மக்களே, கொள்கைகளே இல்லையா? எனக்கு ஆன்மிகமும் தெரியும், பகுத்தறிவும் தெரியும்.


xyzabc
அக் 03, 2024 08:16

well done pavan ji. I hope there are lots of such souls who can uphold the religion. The rule of dravidians only makes mockery and nonsense on hinduism and beliefs of hindus.


பாமரன்
அக் 03, 2024 08:01

அய்யோ பாவம்... படம் தியேட்டர் விட்டு ஓடிட்டது தெரியாம வெற்றி விழா கொண்டாடுறாப்ல... நடிகன்ல... அது சரி


sankari n
அக் 03, 2024 06:43

ஆந்திர மக்கள் பசி பட்டினி..நிலச்சரிவு என்று கஷ்டப்படுகிறார்களா..ஆந்திர துணை முதல்வர் போய் ஓடோன்றி சென்று காப்பாற்ற உன் மாநிலத்தில்..என்ன நடக்கிறது என்று பார்..உன் மக்களை..போதை மருந்தில் இருந்து காப்பாற்றுகிறாரா உன் முதல்வர் என்று பார் அடுத்தவரை அப்புறம் நக்கலடிக்கலாம்..


Rajinikanth
அக் 03, 2024 06:10

ஆந்திர துணை முதல்வருக்கு மக்களைக் காப்பற்றும் வேலை ஏதும் இல்லையோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை