உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை: போன்பேவில் வந்துவிட்டது புதிய வசதி

இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை: போன்பேவில் வந்துவிட்டது புதிய வசதி

புதுடில்லி: இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்து கொள்ளும் புதிய வசதியை போன் பே (Phone Pe) அறிமுகப்படுத்துகிறது.நவீன கால உலகில், டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது கட்டாயமாகி உள்ளது. நாளுக்கு நாள் இதன் பயன்பாடும், தாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், இதில் முன்னணியில் இருக்கும் போன்பே செயலி, விரைவில் போன்பே 123பே (123Pay) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பான அறிவிப்பையும் போன்பே வெளியிட்டு உள்ளது.குறைந்த அளவில் 2G இணைப்பு வசதி கொண்ட இடங்களிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுவதை உறுதி செய்ய, நோக்கியா, ஹெச்எம்டி, லாவா உள்ளிட்ட பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதன்முறையாக நுகர்வோர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வது எளிது. 12 மொழிகளில் எப்படி பயன்படுத்தலாம் என்றும் வழிமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளன. விரைவில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களும் இந்த வசதியை பெறலாம். கேமரா பொருத்தப்பட்டுள்ள போன்கள், க்யூ ஆர் கோடு குறியீடுகளை ஸ்கேன் செய்யவும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 01, 2026 13:59

கணக்குல பணம் இல்லை ஒரு 15 லட்.. இல்லை 15 ஆயிரமாவது போட முடியுமா?


தாமரை மலர்கிறது
செப் 01, 2026 01:23

மத்திய அரசின் மற்றொரு சாதனை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2026 20:30

அதெல்லாம் இருக்கட்டும் .... ஃபோன்பே ஆப்ஷன்ஸ் டிரேடிங்கிற்கு இடம் தருகிறதே >> பிடித்தம் குறைவு என விளம்பரம் செய்கிறதே >> செபியிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதா >>


V Venkatachalam, Chennai-87
ஆக 31, 2026 18:39

ப.சி க்கு இது தெரியுமா? ஒரு காலத்தில் இதை பத்தி ஏளனமாக பேசினாரே அதுனால கேக்குறேன்.பூ விக்கும் அம்மாவும் நிலக்கடலை விக்கும் அய்யாவும் இதன் வழியாக பணம் வாங்கிக்குறாங்களே. அதுனால கேக்குறேன்.10 வருடங்களில் அசுர வளர்ச்சின்னா அது மிகையில்லை.


ஆகுயர்த்தோன்
செப் 01, 2026 04:18

இது எல்லாம் பெருமை 15 வருட ஆட்சி இதை கூட செய்ய வில்லை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை