உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தார்வாடு அருகே கலவர பீதி ஊரை காலி செய்யும் மக்கள்

தார்வாடு அருகே கலவர பீதி ஊரை காலி செய்யும் மக்கள்

தார்வாட்: மத கலவர பீதியால், சிறுபான்மையின குடும்பங்கள், ஊரை காலி செய்கின்றன.தார்வாடின், தடகோடு கிராமத்தில் வசிக்கும் சிறுபான்மையின இளைஞர் ஒருவர், சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் ஹிந்து அமைப்பினர் கொதிப்படைந்தனர்.இந்த சம்பவத்துக்கு பின், கிராமத்தில் பற்றம் நிலவியது. போலீசார் தலையிட்டு சூழ்நிலை யை கட்டுப்படுத்தினர். ஹிந்து அமைப்பின் தொண்டர்கள், கிராமத்துக்கு வருகின்றனர். சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இளைஞரை, அயோத்திக்கு அழைத்து செல்வதாக கூறுகின்றனர். எனவே சிறுபான்மை குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர். எப்போது கலவரம் மூளுமோ என்ற பயத்தால், நான்கைந்து குடும்பங்கள்,இரவோடு இரவாக ஊரை விட்டே வெளியேறினர்.கிராமத்தின் சிறுபான்மை சமுதாய மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:பல ஆண்டுகளாக, நாங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும், மத வேறுபாடு இல்லாமல் நடத்தினோம். பரஸ்பரம் கவுரவத்துடன் நடந்து கொண்டோம். சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்தோம்.ஆனால் இளைஞர் செய்த ஒரு தவறு இரண்டு சமுதாயங்களுக்கு இடையே, பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ