உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் உதறலை தரப்போறாங்க! விளாசிய பா.ஜ.

காங்கிரசுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் உதறலை தரப்போறாங்க! விளாசிய பா.ஜ.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரசுக்கு உதறல் அளிக்கும் வகையில் ஓட்டுபோடுவார்கள் என்று பா.ஜ., விமர்சித்துள்ளது.ஜம்முகாஷ்மீரில் 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 26 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. நீண்ட வரிசையில் பலரும் ஓட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். ஓட்டு போடும் மையங்களில் பலத்த கண்காணிப்பும் போடப்பட்டு உள்ளது.தேர்தலில் எங்களுக்கே வெற்றி என்று பா.ஜ.,வும், காங்கிரஸ் கூட்டணியும் பேசி வருகிறது. இந் நிலையில் தேர்தல் நிலவரம் குறித்து பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கூறி இருப்பதாவது; காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி என்பது ஒரு குழப்ப கூட்டணி. அந்த கூட்டணிக்கு தெளிவான பார்வை கிடையாது, மக்கள் நலன் சார்ந்த எந்த குறிக்கோளும் இல்லை. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு கிடைக்கும் ஒரே உதவி அதுவும் பாகிஸ்தானில் இருந்து தான். அப்சல் குரு பற்றி ஓமர் அப்துல்லா தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் பதிலளிக்காமல் மவுனமாக உள்ளது. ஆனால் 10 ஆண்டுகளாக ஜம்முவில் எந்த மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்று ஓமர் அப்துல்லா கூறி வருகிறார். இப்படிப்பட்ட மனோநிலையில் தான் அவர்களும், அதில் உள்ள கூட்டணி கட்சிகளும் இருக்கின்றன.இவ்வாறு ஷெசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை