உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்கள்: கவர்னர் ரவி

"பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்கள்: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனித செங்கோலை மீட்டெடுத்து இந்திய பார்லிமென்டில் நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமுமான தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் இது பெருமைக்குரிய நாள். தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அரசு
மே 28, 2024 15:23

அது பழைய செங்கோல் அல்ல.


Syed ghouse basha
மே 28, 2024 14:36

அமைதி பூங்காவான தமிழகத்திற்கு வந்த சாபக்கேடு


தஞ்சை மன்னர்
மே 28, 2024 13:43

நாங்க எப்போதும் நன்றி உடையவர்கள் தான்


சுகு
மே 28, 2024 12:08

100 சதவீதம் உண்மை


Jai
மே 28, 2024 12:01

தமிழக மக்கள் ரூ500க்கும் @200க்கும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.


kantharvan
மே 28, 2024 16:36

தம்பி ஜெய் ... தமிழன் ஏமாற கோமாளி அல்ல .


தமிழ்வேள்
மே 28, 2024 11:55

.கல்வி பண்பாடு தரமான வாழ்க்கை முறை தேவையில்லை என்பது திமுகவால் திணிக்கப்பட்டுள்ளவது -


Sampath Kumar
மே 28, 2024 11:54

தமிழர்கள் ஒரு போதும் பெருமை அடைய மாட்டார்கள் ஆதிக்க சக்திகளின் அதிகார வெறிக்கு பின்னல் ஒளிந்து கொண்டு இருக்கும் பல காரணத்திற்காக அவர்கள் ஓன்று சேர்ந்தால் பொங்கல் தான்


sakthivel N
மே 28, 2024 11:19

என்ன காரணத்தால் நன்றி சொல்ல வேண்டும்


Arunagiri PJ
மே 28, 2024 10:48

தமிழக மக்கள் சார்பாக நன்றி


venugopal s
மே 28, 2024 10:46

தமிழக மக்களுக்கு எது அவசியமோ அதை பிரதமர் மோடி அவர்கள் செய்யவில்லை, தேவையில்லாதவைகளை மட்டுமே செய்துள்ளார். அப்புறம் எப்படி நன்றியுடன் இருப்பார்கள்?


N Sasikumar Yadhav
மே 28, 2024 12:10

என்ன செய்யனும் எங்கள மாதிரியான தமிழர்களுக்கு நிறைய செய்திருக்கிறார் மோடி


hari
மே 28, 2024 12:16

டாஸ்மாக் இருக்கு... அப்படித்தானே


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி