உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கை: சந்திரசூட் பெருமிதம்!

நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கை: சந்திரசூட் பெருமிதம்!

புதுடில்லி: '' தனி நபர்களின் சுதந்திரத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும் என்ற செய்தியை நாங்கள் அனுப்பியதால் தான், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்,'' என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி.,க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்திய நீதித்துறையில், பல மாநிலங்களில் 50 சதவீத பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 60 முதல் 70 சதவீத பெண்கள் தேர்வாகும் மாநிலங்களும் உண்டு. தற்போது கல்வியானது, குறிப்பாக சட்டக்கல்வி பெண்கைள எட்டி உள்ளது. இந்திய நீதித்துறையில் பாலின சமநிலை, பிரதிலிக்கிறது.எனது தந்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் வரை என்னை நீதிமன்றத்திற்கு வரக்கூடாது எனக்கூறினார். இதனால், நான் ஹார்வர்டு பல்கலையில் 3 ஆண்டுகள் செலவு செய்தேன். அவர் ஓய்வு பெற்ற பிறகே நான் நீதிமன்றத்திற்குள் நுழைந்தேன். இந்திய நீதித்துறையின் ஒட்டுமொத்த சுயவிவரத்தைப் பார்த்தால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் சட்டத்தொழிலில் முதன்முறையாக நுழைபவர்களாக உள்ளனர். நீதித்துறையின் உயர்மட்டங்களில், அதிக பெண்கள் பொறுப்பான பதவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.அவதூறு வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, தனிநபர் வழக்குகளில் தனிநபர் சுதந்திரத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும். தனிப்பட்ட வழக்குகளில் தனிப்பட்ட கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், உண்மையில் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பதில் சுப்ரீம் கோர்ட் முன்னணியில் உள்ளது. இதனாலேயே, நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.

சிறப்பு சட்ட ரத்து வழக்கு

அரசியலமைப்பு ஏற்படுத்தப்ப்டடே பாது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு இடைக்கால ஏற்பாடு என்ற தலைப்பில் ஒரு அத்தியாயமாக சேர்க்கப்பட்டது. பிறகு, அது தற்காலிக அல்லது இடைக்கால ஏற்பாடு என பெயர் மாற்றமானது. அரசியலமைப்பின்படி இடைக்காலமானது நீக்கப்பட்டு, அரசியலமைப்பின் ஒட்டுமொத்த சூழலுடன், ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற அனுமானம் இருந்தது. ஒரு இடைக்கால ஏற்பாட்டை ரத்து செய்வதற்கு, 75 ஆண்டுகள் என்பது மிகக் குறைவானதா?தற்போது, ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் சீரமைக்கப்பட்டு உள்ளது. டில்லியில் உள்ள மத்திய அரசுடன் மாற்றுக் கருத்து கொண்ட அரசியல் கட்சியிடம் அதிகாரம் அமைதியாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்ற சமிக்கைகளை காட்டுகிறது. எனவே, அங்கு ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு உள்ளது. இதனால், அரசியல்சாசன உத்தரவை அமல்படுத்தவில்லை என்ற நீதித்துறையின் மீதான விமர்சனம் தவறு.

குடியுரிமை திருத்தச்சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பிரிட்டனில் கொண்டு வரப்பட்டு இருந்தால், அதனை நீர்த்துப் போகச் செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. ஆனால், அந்த சட்டத்தை செல்லாதது ஆக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது. எனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பு அமர்வுக்காக 62 தீர்ப்புகளை எழுதி உள்ளேன். எங்கள் முன்பு 20 ஆண்டுகளாக முக்கிய விவகாரங்களை கொண்டிருந்த அரசியல்சாசனம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

theruvasagan
பிப் 14, 2025 14:14

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதைப் போல அல்லவா உச்சநிதிமன்ற மாஜி தலைமை நீதிபதி தற்பெருமை சொல்லிக் கொள்ளுகிறார்.


aaruthirumalai
பிப் 14, 2025 12:34

சராசரி மனிதர்கள் பல விசயங்களில் ஒதுங்கியே போகிறார்கள் காரணம் சட்டமும் நீதியும் தங்களுக்கு நடைமுறையில் கிடைக்காது என்பதே உண்மை. இது அனைத்து மக்களுக்கும் தெரியும்.


C.SRIRAM
பிப் 14, 2025 10:43

எதார்த்தத்துக்கும் இவரது சிந்தனைக்கும் வெகு தூரம் போல தெரிகிறது. ஒவ்வொரு வழக்கிலும் அளவுக்கு மீறிய தாமதம், எந்த அரசியல்வாதி சம்பத்தப்பட்ட வழக்கும் இறுதி வரை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கப்பட்டு அடித்த கொள்ளை சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படாமை மற்றும் கீழ் மட்டத்தில் இருக்கும் லஞ்சம், ஊழல்... மக்கள் அதிகபட்ச வெறுப்புடன் இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டால் சில வழக்குகளில் குற்றவாளி மேலே போய் சேர்ந்துவிடுவார். பிறகு தண்டனை அங்கு தான் . த்ருப்திகரம் இல்லை


Barakat Ali
பிப் 14, 2025 09:58

வேற வழியில்லாமே நம்புறோம் யுவர் ஆனர் .....


vbs manian
பிப் 14, 2025 09:39

ஊழல் விவகாரங்களில் மோசம். பலநாடுகளில் உயர் மட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் கடுமையாக தண்டிக்க படுகிறார்கள். மலேசியா தென் ஆப்பிரிக்கா பாக்கிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை.


vbs manian
பிப் 14, 2025 09:35

ஊழல் அரசியல்வாதிகளை கையாளும் விதம் மோசமாக உள்ளது. அவர்கள் இன்னும் அதிக பலம் பெற்று உலா வருகின்றனர்.


c.mohanraj raj
பிப் 14, 2025 09:26

நீதிபதிகளுக்கு உள்ள சலுகைகளை வெளியில் சொல்ல வேண்டும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் 100 கோடி வழக்கு உலகத்தில் எந்த நாட்டிலும் தேக்கத்தில் இல்லை


Laddoo
பிப் 14, 2025 08:59

வக்கீல்களுக்கு நீதிபதிகளுக்கென்று ஒரு கடுமையான தேர்வு முறை அவசியம் என்று சொல்லியிருந்தால் மக்கள் வரவேற்றிருப்பர். பாடாவதி கொலிஜியம் வேண்டாம் என்று சொல்லியிருந்தால் நீதி மன்றங்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கும். அத விடுத்து...


Karthik
பிப் 14, 2025 08:30

நீதிமன்றங்கள் மீது மக்கள் அவநம்பிக்கையில் தான் உள்ளனர் என்பது இவருக்கு தெரிந்தும் தெரியாதது போல் உருட்டுகிறார்.. மட்டமான வியாக்யானம்.


Karthik
பிப் 14, 2025 08:28

இது சந்திரசூட்டின் மட்டமான அணுகுமுறை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை