உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்ற பின்னணி இருந்தால் தேர்தலில் நிற்க நிரந்தர தடை?

குற்ற பின்னணி இருந்தால் தேர்தலில் நிற்க நிரந்தர தடை?

புதுடில்லி : கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட நிரந்தரமாக தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், 'எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951ன் படி, அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை உள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மாற்றி வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், 'இது, அரசியல் சாசன பிரிவு சார்ந்த விவகாரம் என்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். அடுத்த மூன்று வாரத்தில் மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் கமிஷன் இந்த மனு மீது விரிவான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

spr
பிப் 11, 2025 20:26

"எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951ன் படி, அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை உள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மாற்றி வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" மிகச் சரியான கருத்தே. அதோடு குற்றம் சாட்டப்பட்டாலே அவர் அதிலிருந்து விடுவிக்கப்படும்வரை தேர்தலில் நிற்கத் தடைவிதிக்க வேண்டும் ஆளும் கட்சியாலும் காவற் துறையாலும் சிலருக்கு பிரச்சினை என வந்தாலும் நீதிமன்றங்கள் விரைவாக தீர்ப்பளித்தால் இதுவும் சரியாகும்


KRISHNAN R
பிப் 11, 2025 19:40

சரிதான்.. .. அப்பீல் பெயில்... கடைசிவரை... எல்லாம். பே....பே தான்


N.Purushothaman
பிப் 11, 2025 15:09

நிச்சயம் இப்படி ஒரு மாற்று தேவை .....


Indhuindian
பிப் 11, 2025 10:24

அய்யய்யோ அப்போ அரசியல்ல சேர்றதாலே ஒன்னும் பிரயோஜனம் இல்லையா


மொட்டை தாசன்...
பிப் 11, 2025 09:45

இதெல்லாம் நடக்காது பாஸ் வேற வேலை இருந்தால் போய் பாருங்கள் .


W W
பிப் 11, 2025 09:21

குற்ற பின்னணியில் இருப்பவர்கள் குற்றம் நிரூப்பிக்கும்வரை அவர்களை நல்லவர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது,இதன் அவர்கள் சாகும்வரை நீட்டிக்க கூடாது.அவர்களை தடைசெய்தீ வேண்டும்.இதில் கள்ள சாராயம், அதனால் சாவு ,கள்ளக்கடத்தல், Rape cases, Murder cases இவர்கள் யாரும் உத்தமர்கள் இல்லை.நம் நாட்டில் மற்றுமே சிலர் உயர் பதவிகளிலும் இருந்து கொள்ளையடித்து கோடிசுவர்களாக திமிர் பெச்சில் இருந்து வருகிறார்கள்,அந்த கடவுள்தான் மக்களை காப்பாற்ற வேண்டும் பொலிட்டிகள் பூலுஸ்ஸன் மாற்றப்பட்ட வேண்டும் .- Eradicate Dirty Politics.


Dharmavaan
பிப் 11, 2025 07:46

நீதி மன்றங்களின் உத்தரவு, வழி காட்டி போன்ற சொற்கள் மத்திய அரசை/பாராளுமன்றத்தை அவமானப்படுத்துவதாகும். மக்கள் பாராளுமன்றத்துக்கே ஆளும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள் நீதி மன்றத்துக்கு அல்ல .மத்திய அரசு ஆட்சேபிக்க வேண்டும் நீதி மன்றம் பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட்டதே


GMM
பிப் 11, 2025 07:42

குற்ற பின்னணி வாக்காளர் வாக்களிக்க, வேட்பாளராய் போட்டியிட நிரந்தரம் தடை செய்ய வேண்டும் . வாக்காளர் குற்ற விவரம் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு கலெக்டர், போலீஸ், நீதிமன்றம் 3 மாதம் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்களிக்க, போட்டியிட நிரந்தர தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உத்தரவை எதிர்த்து வழக்காட அனுமதி கூடாது.


நரேந்திர பாரதி
பிப் 11, 2025 07:29

இதை எந்த அரசியல் வியாதியும் ஒத்துக் கொள்ளமாட்டான்.


Karuthu kirukkan
பிப் 11, 2025 06:13

இதை தானே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ...ஆனால் ஆளும் கட்சியினர் அடுத்த தேர்தலில் போட்டியிட காவல் நிலையத்திற்கு கல்லா கட்டவேண்டி வருமே ...ம்ம்ம்ம் எப்படி பார்த்தாலும் கட்டைய போட்டு சட்டத்தின் ஓட்டைய பெருசாக்குறாங்களே


சமீபத்திய செய்தி