உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோட்ட வாரியங்களுக்கு பியுஷ் கோயல் உத்தரவு

தோட்ட வாரியங்களுக்கு பியுஷ் கோயல் உத்தரவு

புதுடில்லி:அனைத்து சர்வதேச, உள்நாட்டு வர்த்தக கண்காட்சிகளில், தோட்ட வாரியங்கள், தங்களது அனைத்து தயாரிப்புகளையும் 'பாரத் பெவிலியன்' பெயரில் காட்சிப்படுத்த முன்வர வேண்டும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் வலியுறுத்தி உள்ளார். மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மசாலா பொருட்கள் வாரியம், தேயிலை வாரியம் மற்றும் ரப்பர் வாரியம், காபி வாரியம், மஞ்சள் வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை அமைச்சர் பியுஷ் கோயல் ஆய்வு செய்தார். “அனைத்து வாரியங்களும், புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளின் லோகோகளில் 'இந்தியா' என்ற பெயரைச் சேர்க்க வேண்டும்; தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் சலுகைகளை பயன்படுத்தி, உலக அளவில் போட்டித்திறனை மேம்படுத்த வேண்டும்; விவசாயிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என, கோயல் வலியுறுத்தினார். சர்வதேச, உள்நாட்டு வர்த்தக கண்காட்சிகளில் தயாரிப்புகளை அனைத்து துறையினரும் பாரத் பெவிலியன் என்ற பெயரில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், பியுஷ் கோயல் கூறினார். வர்த்தக கண்காட்சிகளில், தோட்ட வாரியங்கள் தங்களது அனைத்து தயாரிப்புகளையும், 'பாரத் பெவிலியன்' பெயரில் காட்சிப்படுத்த முன்வர வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை