உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க சதி செய்தார்கள்: சொல்கிறார் கெஜ்ரிவால்

என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க சதி செய்தார்கள்: சொல்கிறார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்' என டில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: என்னையும், ஆம்ஆத்மி கட்சி தலைவர் சிசோடியாவையும் ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார். அவர் எங்களது இமெஜை கெடுக்க முயன்றார். நவராத்திரி விழா துவங்கும் போது, முதல்வர் வீட்டை காலி செய்து விடுவேன். அரசு வசதிகள் எல்லாம் நிராகரித்துவிடுவேன். எதிர்க்கட்சிகள் மற்றும் அரசை உடைக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்றவற்றை பிரதமர் மோடி பயன்படுத்தும் விதம்? இது சரியா? இது தான் தேச பக்தியா?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7i849r8z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களை பா.ஜ.,வில் சேர்ப்பது நியாயமானதா? நான் திருடன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்னை சிறைக்கு அனுப்பியவர்கள் திருடன் என்று நினைக்கிறீர்களா? கடந்த 10 ஆண்டுகளில் நான் அன்பை மட்டுமே சம்பாதித்தேன். அதனால் தான் மக்கள் என் மீது அன்பு செலுத்துகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளால் மனதளவில் காயம் அடைந்துள்ளேன். ஊழலில் ஈடுபடவோ, முதல்வர் நாற்காலியில் அமரவோ அரசியலில் சேரவில்லை. நான் ஊழல் செய்தேன் என்று நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டளிக்க வேண்டாம்.

பணம் சம்பாதிக்கவில்லை

மரியாதையை மட்டுமே சம்பாதித்துள்ளோம், பணத்தை அல்ல. நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். லோக்சபா தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ்., தேவையில்லை என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார். நான் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திடம் கேட்க விரும்புகிறேன். நட்டா இப்படி சொல்லும் போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Saai Sundharamurthy AVK
செப் 23, 2024 13:15

அப்படியானால் ஏன் பதவியை ராஜினாமா செய்தீர்கள் ????


Sridhar
செப் 23, 2024 12:41

நீ CM ஆ தொடர கூடாதுன்னு கண்டிப்பா கோர்ட்டு சொல்லிடிச்சு. உனக்கு அந்த வீட்டை விட்டு வெளிய வரணுமேங்கற கவலை. அதவச்சு ஏதாவது அனுதாபம் தேடலாம்னு முயற்சி செய்யுற. உன்ன ஜெயில்ல வச்சு இவ்வளவு நாளா பெயில் கொடுக்காம இருந்தது கோர்ட்டு தானே தவிர மோடி இல்ல. உன்னோட ரேஞ்சுக்கு எதுக்கெடுத்தாலும் அவர் பேர இழுக்கறதுனால உன்னோட லெவல் உயரப்போறதில்ல. நீ அறிவித்திருக்கற இலவசங்களால அப்பாவி மக்கள் உனக்கு வோட்டு போடுவாங்க, அதவச்சு டகாலடி வேல செஞ்சு குற்றமற்றவன்னு சொல்லிட்டு திரியலாம்னு நினைக்கிற. ஆனா ஒன்னு, இந்த ED யும் மோடியும் வழவழனு கேச நடத்துற விதத்தை பாக்கும்போது நீ தப்பிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல. சோனியாவும் ராகுலும் கூட இன்னும் வெளியே பிரீயா சுத்திக்கிட்டுதானே இருக்காங்க அதுபோல உன் காலமும் ஓடும். மக்களாகிய நாங்கள்தான் சும்மா கிடந்தது அடிச்சிக்குவோம்.


Narayanan
செப் 23, 2024 12:02

அப்படியென்றால் நிமிர்ந்துதானே நிற்கவேண்டும் . எதற்காக புதிய முதல்வர் ஏன் ?அதுவும் மனைவிக்கு கொடுக்காத முதல்வர் பதவியை இவளுக்கு வழங்கவேண்டிய அவசியம் என்ன ??


Rajasekar Jayaraman
செப் 23, 2024 06:56

நீ ஊழல்வாதிதான் எத்தனை சிம்கள் வாங்கி பயன்படுத்தி அழித்தாய் தீவிரவாதிகள் செய்யும் செயலை நீ செய்திருக்கிறாய்.


ராமகிருஷ்ணன்
செப் 23, 2024 06:52

ஆமாம் ஆமாம் உலகத்துல மிக பெரிய யோக்கியன்கள் ராகுல், கருணாநிதி, லல்லு, கெஜரி, ஸ்டாலின் என்று கல்வெட்டுகளில் எழுதி உலகம் முழுவதும் பல இடங்களில் புதைத்து வைத்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வைக்க வேண்டும்.


அப்பாவி
செப் 22, 2024 22:39

அமலாக்கத்துறை தத்திகள். கைது செய்வதில் காட்டிய முனைப்பு குற்றங்களை நிரூபிப்பதில் காட்டுவதில்லை. அடுத்தவன் பேரைக் கெடுப்பதில் அவ்வளவு ஆனந்தம்.


sankar
செப் 22, 2024 21:17

ஜெயிலுக்கு போன பிறகு நீ அந்த நாற்காலியை விடாமல் இருந்ததே தப்பு - கோர்ட்டுக்கு கூட திராணி இல்லை இதை எடுத்துச்சொல்ல


M Ramachandran
செப் 22, 2024 19:35

உமது குரு அன்னாஹசாரே உமக்கு சர்டிபிகேட் கொடுத்து ஊர்ஜிதமாகி கொஞ்ச நாளைக்கு தீகாரில் களி அதாவது வறட்டி போன்ற சப்பாத்தி சாப்பிட்ட ஞாபகம் அதற்குள்ளாகவா போய் விட்டது? ரொம்ப தான் குளிர் விட்டிருக்கு. வந்திருப்பது நிரந்தர விடுதலை இல்லை என்பது நினைவிருக்கட்டும் மக்களிடம் ரீல் கதையெல்லாம் எடுபடாது. டில்லி மக்களும் நம் தமிழ்நாட்டு மக்களைபோல் இருப்பதால் கண்ட கண்ட கதை பேச சொல்லுது


Barakat Ali
செப் 22, 2024 18:48

Kejri, proving yourself as innocent lies with you. If your legal advisor fails to prove you so, it is up to you.


SP
செப் 22, 2024 16:43

இந்த நபர் எப்படிப்பட்ட ஆபத்தான நபர் என்று டில்லிமக்கள் உணர தொடங்கியுள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை