உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிங்கத்தை கேமராவில் க்ளிக்கிய பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம்!

சிங்கத்தை கேமராவில் க்ளிக்கிய பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்; கிர் வனவிலங்கு சரணாலயம் சென்ற பிரதமர் மோடி அங்கு சிங்கங்களை மிக அருகில் பார்க்கும் லயன் சபாரி மேற்கொண்டு கேமராவில் அவற்றை படம் பிடித்தார்.குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (மார்ச். 3) சர்வதேச வனவிலங்கு நாள் என்பதால் அங்குள்ள கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம் சென்றார்.உலக நாடுகளில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடம் என்ற பெருமையை பெற்றுள்ள கிர் சரணாலயத்தில் வனவிலங்குகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்கும் லயன் சவாரி (Lion safari) என்ற பயணத்தை மேற்கொண்டார். அதற்காக அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்றார். கேமரா மூலம், வனவிலங்கு சரணாலயத்தில் நடமாடிய சிங்கத்தை போட்டோ எடுத்து மகிழ்ந்தார். கேமராவில் க்ளிக்கிய போட்டோக்களை பிரதமர் மோடி, தமது எக்ஸ் தள வலை பக்கத்தில் பதிவிட்டு கூறி உள்ளதாவது; இன்று உலக வனவிலங்கு நாள் என்பதால் கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகம் கிர் வனப்பகுதியில் லயன் சபாரி சென்றேன். நான் குஜராத் முதல்வராக இருந்து இங்கே வந்த போது செய்த பல பணிகள் இப்போது நினைவுக்கு வருகிறது. கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர், அவர்களை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பங்கு பாராட்டத்தக்கது.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

nisar ahmad
மார் 03, 2025 21:22

ஹேய் நல்ல காமெடி கூண்டுக்குள்ள இருந்த புலியை கேமராவில் பதிந்த வீரர்.


TRE
மார் 03, 2025 16:24

டிரம்ப் முன்னடி


N Sasikumar Yadhav
மார் 03, 2025 15:49

கோபாலபுர கொத்தடிமைகளின் கருத்துக்களுக்கு ஆசுகர் அவார்டு கொடுக்கலாம் . தமிழக சட்டஒழுங்கு சந்தி சிரிக்கிறது அதற்கு கருத்து போடாமல் பிரதமருக்கு எதிராக பொங்குகிறானுங்க கோபாலபுர கொத்தடிமைகள்


Sankare Eswar
மார் 03, 2025 15:26

மத்திய தர மக்கள் வாழ்ழ்க்கை .... போய்கிட்டுருக்கு .... இவர் என்னடானா ... கிளிக்குறார் ... இந்த லட்சணத்துல வல்லூறு அரசாள கனவு வேற


Sankare Eswar
மார் 03, 2025 15:25

mannaraatchi


Gokul Krishnan
மார் 03, 2025 14:58

நமக்கு வாய்த்த மத்திய அரசும் சரி இல்லை மாநில அரசும் சரி இல்லை விலை வாசி மிக கடுமையாக உயர்வு அன்றாடம் குடிக்கும் காபி டீ தூள் முதல் அனைத்து மளிகை பொருட்களும் மிக கடுமையாக உயர்வு விலை வாசி பற்றி மக்கள் பேசி விட கூடாது என்பதில் மத்திய மாநில அரசுகள் மிக கவனமாக உள்ளன


பாமரன்
மார் 03, 2025 14:56

ஒரு தொழில் முறை NGC ஃபோட்டோகிராபர் கூட இப்படி ஒரு செட்டப்ல போயிருக்க மாட்டாப்ல...


R K Raman
மார் 03, 2025 15:46

சைக்கிள்களில் போவதை விடவா?


Priyan Vadanad
மார் 03, 2025 14:54

மான் குட்டியை தடவிக்கொடுத்தது போல, மயிலை வருடிக் கொடுத்தது போல, சிங்கக்குட்டிகளையும் வருடிக்கொடுப்பது போல ஒரு போட்டோஷூட் எடுத்து போட்டிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும்.


Priyan Vadanad
மார் 03, 2025 14:50

நாளுக்கொரு கெட்டப்பில் அசத்துறார்.


பிரேம்ஜி
மார் 03, 2025 14:42

போட்டோ எடுப்பது, போஸ் கொடுப்பது ராஜாக்களின் பொழுதுபோக்கு!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை