உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., அலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைக்கும் முடிவை அறிவிப்பார்

பா.ஜ., அலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைக்கும் முடிவை அறிவிப்பார்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதியிலும் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. உ.பி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ.,வை விட இண்டியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. ஆனால் மெஜாராட்டியை விட, பா.ஜ., 300க்கு மேற்பட்ட தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கையில் பிரதமர் மோடி களத்தில் இறங்கி உள்ளார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வருகை தர உள்ள பிரதமர் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து 3முறையாக ஆட்சி கட்டிலில் அமர வைக்க பா.ஜ., வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இண்டியா கூட்டணியினர் ஆலோசனை

இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று மாலை டில்லியில் ஒன்றுக் கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கூட்டணி கட்சியினர் விவாதிக்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து கூட்டணி கட்சியினருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜூன் 05, 2024 12:30

இந்தமுறை நீங்கள் நம் இந்திய திருநாட்டை தேசதுரோக கட்சியினரிடமிருந்து காப்பாற்ற மிக மிக கடுமையான முடிவுகளை எடுத்து, நம் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.


krishnan
ஜூன் 04, 2024 19:48

குறைந்த சம்பளம் வாங்கும் கூலிகள் , பூக்காரி , தள்ளு வண்டி வியாபாரி, தினா கூலி அகியோரத்தி மனைவிகள் காஸ் விலை , ஏற்றதால் , இந்த மக்களுக்கு மோடி ஏதும் செய்யாததால் மோடியை தோற்கடித்தார் .. தேசம் , தேச பற்று , ராணுவம் , ரோடு , மெட்ரோ , வந்த பரத் இவர்களுக்கு ஒன்னும் பிரயோசனம் இல்லை. ரோடு , ஏர்போர்ட்டு வோட்டு போதாது...சாதாரண மக்கள் தான் வோட்டு போடணும் என்ற அறிவு பிஜேபி க்கு இல்லை


Sivaraman
ஜூன் 04, 2024 19:23

இந்திய அரசியலில் பாஜக ஒரு சறுக்கலுக்குப் பின் சுயபரிசோதனை செய்து அபார வெற்றி அடைந்து வருவதை கண்கூடாக பார்த்து உள்ளோம் . பல மாநிலங்களில் பார்த்து இருப்பதால் இன்றும் மற்ற கட்சிகள் நெல்லிக்கைமூட்டையாக இருந்து வருவது பாஜகவை எளிதில் வீழ்த்த முடியாது. என்பதை நன்கு காட்டுகிறது . ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்க இந்த சந்தர்ப்பம் உதவும்


Swaminathan L
ஜூன் 04, 2024 17:05

தேர்தல் நேரத்தில் எவ்வளவு சீட்டுகள் ஜெயிப்போம் என்று ஹேஷ்யமாகக் கூறாத அரசியல்வாதிகள் ஒருவரும் இல்லை. நானூறு வெல்வோம் என்று மோடி கூறி வந்தது மக்களுக்குத் தந்த உத்தரவாதமோ, சத்தியம் அல்ல. அது அவருடைய, பாஜக கூட்டணியுடைய நம்பிக்கையின் பேரில் சொல்லி வந்தது. 295 என்ற ராகுல், பாஜக 140 தாண்டாது என்ற அகிலேஷ் யாதவ், கண்டி கூட்டணி 300 பெறும் என்ற தேஜஸ்வி யாதவ், வெற்றியின் முகட்டில் நாங்கள், எங்கள் கூட்டணியே ஆட்சி என்ற தமிழக முதல்வர்.. இப்படி எல்லோருமே என்னென்னவோ பேசியது நிதர்சனம். மக்களுடைய முடிவும், செயலும் இன்று ரிசல்டாக வெளி வருகிறது. தனிப்பெரும் கட்சி, கூட்டணியாக 295+ பெறும் கட்சி என்கிற வகையில் பாஜகவுக்கு அடுத்த ஆட்சி அமைக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது. அந்த கூட்டணி மோடியை அடுத்த பிரதமர் என்று முடிவு செய்தால் அவரே மறுபடியும் பிரதமர் ஆவதையும் யாரும் தடுக்க முடியாது. மிருகபலம் கொண்ட பெரும்பான்மை கிடைத்தால் என்டிஏ கூட்டணி ஆட்சி செயல்பாடுகள் எப்படி இருக்குமோ அப்படி இப்போது இருக்க வாய்ப்பில்லை. பாஜக தலைமை சுயபரிசோதனை செய்து என்னென்ன காரணங்களால் உத்தேசித்த எண்ணிக்கையில் சீட்டுகளை வெல்ல முடியவில்லை என்று கண்டறிந்து செயல்பாடுகளை, பொதுவெளிப் பேச்சுகளை கட்டமைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல்களின் நடுவில் காங்கிரஸ் எடுத்து வைத்த இன்ஹெரிடன்ஸ் வரி விவகாரத்தை, பிரதமர் பிரச்சாரங்களில் முன்னெடுத்து எதிர்வினை ஆற்றிய விதம் அவருடைய நிலையை சராசரி அரசியல்வாதியாக கீழிறக்கியதும், சிறுபான்மை ஓட்டுகள் உத்தரபிரதேசத்தில், இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸ், இண்டி கூட்டணிக்குக் கிடைத்ததும் உண்மை. இராமர் ஆலயம் எழுந்துள்ள அயோத்தி சார்ந்த பாராளுமன்றத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது பாஜகவின் கண்களைத் திறக்கும்.


Bal
ஜூன் 04, 2024 15:46

ஆப் கி பார் சாக்கோ பார்


Lion Drsekar
ஜூன் 04, 2024 15:31

ஆட்சி அமைக்கும் முடிவு அறிவிப்புக்கு முன்பாக ஒன்றை கூறவேண்டும், உங்கள் கட்சிக்காரர்கள் மக்களோடு மக்களாக தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்திருக்கிறார்கள் அது தவிர ஏழை எளிய தொண்டர்கள் மற்றும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு அமைச்சர் பெருமக்களும் அவ்வளவு எளிதில் அளந்து கொண்டது இல்லை, 70 ஆண்டு ஆட்சியில் அவர்கள் எப்படி வாழ்ந்தார்களா அதே அடிகிசுவட்டைதான் இன்றுவரை பின்பற்றி வந்திருக்கிறார்கள் . தொண்டர்களுக்காக மக்களுக்காக எங்குமே எதுவுமே யாருமே செய்ததே இல்லை, மேலும் தலைவர் என்பவர் கூட்டம் கூடிய பின்பு கைபேசியில் அழைத்த பின்புதான் வீட்டை விட்டே கிளம்புகிறார் என்பது மிகப்பெரிய வருத்தம் அடைகிறார்கள் தொண்டர்கள் , அதே ஈரத்தில் யாருமே அவ்வளவு எளிதாக எந்த ஒரு தொண்டனோ அல்லது நல்லவர்களா யாரையுமே சந்திக்கவே முடியாத ஒரு நிலையில் கட்சி இருக்கிறது .எல்லோரும் திரும்பும் இடமெல்லாம் குறை கூறுகிறார்கள் , குறுகிய சிறிய வட்டத்துக்குள் இயங்கும் இவர்களது கட்சி நிகழ்வுகளுக்கு சென்றாலே தெரியும் , அங்கு கூடும் தொண்டர்களை ஏதாவது ஒரு தலை துணை தலை, யாரையாவது கண்ணுக்கு கண் நேரில் பார்த்து விசாரித்து எப்படி ருக்கிறீர்கள் என்று கேட்டிருப்பார்களா ? அல்லது வாருங்கள் என்றாவது அழைத்திருப்பார்களா? அதிகமாக பணம் கொடுக்கும் தலைகளுக்கே கொஞ்சம்தான் மரியாதை. அவர்களே பல நேரங்களில் தலையைக் காட்டிவிட்டு சென்றுவிடலாம் என்றுகூறிதான் ஒவ்வொரு கூட்டத்துக்கும் வருகிறார்கள் . எனக்கு எல்லா நிலைகளிலும் எல்லா கட்சிகளிலும் மிகப்பெரிய நிலையில் இருப்பவர்கள் நெருக்கம், ஆகவே ஒரு நல்ல நிலைக்கு உயர்த்துவதற்கு அறிய கருத்துக்களை கூறவேண்டிய நிலை நமக்கு உள்ளது , முடிவாக இந்த கட்சிக்கும் முன்பு ஆண்ட கட்சிகளுக்கும் மக்களையும் தொண்டர்களையும் நடத்துவதில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்பது வருத்தம் . மக்களோடு மக்களாக வாழ்ந்தால்தான் கட்சி வளரும், வந்தே மாதரம்


Prasanna Krishnan R
ஜூன் 04, 2024 16:46

Is he a good patriotic? Think before you comment.


அம்புஜம்
ஜூன் 04, 2024 15:31

அடுத்த ஸ்டண்ட் எனக்கு பிரதமராக விருப்பம் இல்லைந்னு சொல்றதுதான். முழுநேர தியானத்தில் ஈடுபடலாம்.


Sriniv
ஜூன் 04, 2024 15:21

I feel Modi should not stake claim to form the Govt.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை