உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி

கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25 வது நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி வரும் ஜூலை 26 ல் கார்கில் செல்கிறார். அங்கு நடக்கும் நினைவு நாளில் அவர் பங்கேற்று நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்துகிறார். கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாக்., ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனையடுத்து நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பலியாயினர். கார்கிலில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர்த்தியாகம் பல செய்து பாகிஸ்தான் படையினரை நமது இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர். இதனை நினைவு கொள்ளும் வகையில் பிரதமர் மோடி கார்கில் செல்கிறார். ஆண்டுதோறும் அவர் கார்கிலில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கார்கில் போர் முடிந்து இந்த முறை 25 வது ஆண்டு சில்வர் ஜூப்ளி என்பதால் பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூலை 22, 2024 17:07

பார்க்கவே பயமாக இருக்கிறது!


சுலைமான்
ஜூலை 22, 2024 13:15

தயவு செய்து எங்கள் தமிழகத்திற்கு வாருங்கள். இங்கு நடக்கும் ஆட்சி அவலங்களை காணுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள். இந்த திமுக ஆட்சி தொடரலாமா என்று .


Mario
ஜூலை 22, 2024 13:05

அடுத்த நாடகம்


RKumar
ஜூலை 22, 2024 12:24

சீனா எல்லையில் நிற்க வைத்து சீனர்களை சுட செய்யலாம்


sundarsvpr
ஜூலை 22, 2024 10:02

சுற்றுலா பயணங்கள் செல்கின்றோம் புண்ணிய ஸ்தலங்கள் இயற்கைக்காட்சி இடங்கள் செல்கிறோம் அரசியல் தலைவர்கள் நினைவு இடங்களுக்கு போய் மரியாதை செய்கிறோம். நாட்டை காத்திட தியாகம் செய்த ராணுவ வீரர்கள் இளம் வயதில் நினைவு இடங்களுக்கு சென்று மரியாதை செய்வது உண்மையான யாத்திரை. கார்கில் செல்லவேண்டும் என்பதில்லை. ஊர்களுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு சென்று நினைவு கூறலாம்.


Vinil Kumar
ஜூலை 22, 2024 09:41

Instead of showcase please visit Manipur and the problematic places.


Venkates.P
ஜூலை 22, 2024 10:53

அப்படியே நம்ம விடியல கள்ளக்குறிச்சிக்கு போக சொல்லு ப்ரோ


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை