உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி?

ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.பிரதமரின் பயணம் குறித்து நம் நாட்டு அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. இதற்கு முன் 2019 ஆண்டு செப்., மாதம் மோடி ரஷ்யா சென்று இருந்தார்.இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது; மோடியின் ரஷ்ய பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம் எனக்கூறப்பட்டு உள்ளது.இதுவரை இந்தியா ரஷ்யா உச்சி மாநாடு 21 முறை நடந்துள்ளது. கடைசியாக 2021 டிச.,26 ல் டில்லியில் நடந்த இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஜூன் 25, 2024 21:48

அவர் செய்வதற்கு முன்பாகவே திராவிட தலைவர் ரஷ்யா யூரோப் அமெரிக்கா கனடா முதலிய நாடுகளுக்குன்சென்றுவர வேண்டாம?


kulandai kannan
ஜூன் 25, 2024 20:16

சண்முகம், எடுறா வண்டிய


hari
ஜூன் 25, 2024 20:37

ஆமாம் நேரா டாஸ்மாககு உடற வண்டிய


Senthoora
ஜூன் 25, 2024 18:19

00


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை