உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடைந்தது சத்ரபதி சிவாஜி சிலை: மனம் உடைந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

உடைந்தது சத்ரபதி சிவாஜி சிலை: மனம் உடைந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பலத்த காற்றில் 35 அடி உயர மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தததற்காக, தலை வணங்கி மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா சென்றுள்ள பிரதமர் மோடி, பல்கார் பகுதியில் ரூ.76,000 கோடி மதிப்பிலான வத்வான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது இந்தியாவின் பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக அமைய உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ak6v4jty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய தாயின் மகனான சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல. சிவாஜி எனக்கு கடவுள் போன்றவர். காற்று, மழையில் சிலை சேதமடைந்ததற்கு எனது கடவுள் சிவாஜியிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த மண்ணின் மைந்தரான சாவர்க்கரை அவமதித்த சிலர் (காங்கிரசார்), அதற்காக மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்று முக்கியமான நாள். இது கடந்த 10 ஆண்டுகளாக இருந்தாலும் சரி, இப்போது எனது அரசின் மூன்றாவது முறையாக இருந்தாலும் சரி, பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் வளர்ச்சிக்குத் தேவையான சக்தியும் வளங்களும் உள்ளன. இன்று ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பில் வத்வான் துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். மஹாராஷ்டிராவின் ராஜ்கோட் கோட்டையில் கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த, 35 அடி உயர மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை, சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்திருந்தது.

பிரதமர் சிங்கப்பூர் பயணம்

டில்லியில் நிருபர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பிரதமர் மோடி செப்.,3 ம் தேதி புருனே நாட்டிற்கும், மறுநாள் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அப்பாவி
ஆக 31, 2024 08:18

புது ரயிவே டேசன் டமால். அதுக்கு மன்னிப்பு கேட்பு உண்டா?


xyzabc
ஆக 30, 2024 22:48

வேணு வேலன் காந்தத்தை எடுத்து கொண்டு அமெரிக்கா சென்று இருந்தால் ரூ 200க்கு மேல ஈர்க்கலாம்


Velan Iyengaar
ஆக 30, 2024 19:53

இந்த கும்பலுக்கும் மன்னிப்புக்கும் எவ்வ்ளோ பந்தம் ஒருத்தர் விடாம ஒரு இடம் விடாம மன்னிப்பு கேக்குறாங்க நமக்கு நல்ல டைம் பாஸ் ஹா எ ஹா எ


தாமரை மலர்கிறது
ஆக 30, 2024 19:27

இயற்கை பேரிடருக்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை.


venugopal s
ஆக 30, 2024 19:00

என்னடா நம்ம ஜீ க்கு மன்னிப்பு கேட்டு பழக்கமே இல்லையே என்று பார்த்தால் அடுத்த மாதம் மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது அல்லவா, அதன் பாதிப்பு என்பது புரிந்தது!


சிவா அருவங்காடு
ஆக 30, 2024 18:49

மோடி அரசு தொடர வேண்டும்


Thirumal s S
ஆக 30, 2024 18:42

பொய். எலெக்ஷன் வருது அழ கூட செய்வார்.


venugopal s
ஆக 30, 2024 18:26

இந்த நாடகம் எல்லாம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரவுள்ள மாநில சட்டமன்ற தேர்தல் படுத்தும் பாடு! மஹாராஷ்டிரா மக்கள் சிவாஜியை அவர்களது குலதெய்வம் போல் நினைப்பவர்கள்!


Corporate Goons
ஆக 30, 2024 16:23

வணங்காமுடி பட்டம் தகர்ந்து விட்டது. எனினும், நாட்டின் சொத்து பல்லாயிரக்கணக்கான கோடிகள், லச்சக்கணக்கான கோடிகளை ஒரு சிலருக்கு தாடை வார்ப்பைஹில் என்தால்ப்ய மாற்றமும் இல்லை. ஆட்சியில் இருந்து மட்டுமல்ல, நாட்டிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் மோடியும் மோடியின் ஆட்களும். என்னதான் நாடகமாடினானுலும், நாட்டு மக்கஹ் மோடியை மன்னிக்க மாட்டார்கள்.


Ananth
ஆக 30, 2024 16:43

அபத்தமான கருத்து. மோடிக்கு ஓட்டு போட்டவர்கள், இந்தியர்களா? இல்லை அந்நியர்களா? மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும் இந்தியர்கள் என்றால் வன்மமான கருத்து.


N Sasikumar Yadhav
ஆக 30, 2024 17:00

மதமாற்றம் செய்ய முடியாத கோபத்தால் மோடிஜியை இதுபோன்ற சமயத்தில் திட்டி தங்களுடைய கேவலமான அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள்


Corporate Goons
ஆக 30, 2024 17:58

மோடியை தவிர மற்றவர்களை தேர்ந்தெடுத்தவர்கள் இந்தியர்கள் என்று மோடி பாவித்ததுண்டா?எப்போதாவது அப்படி நினைத்து பார்த்ததாவது உண்டா?


Sathyanarayanan Sathyasekaren
ஆக 30, 2024 18:45

ஊழல் செய்து, பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து, எங்கே எந்த பினாமி பெயரில் சொத்து இருக்கிறது என்று கூட தெரியாத திருட்டு திராவிடிய கழிசடைகள் ஊழல்அற்ற மோடிஜியை குறை சொல்லி பொய் கருத்துக்களை பொய் பெயரில் எழுதுவது வெட்கக்கேடு. அம்பானியும், அதானியும் பரம்பரை தொழில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோடிஜி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே முன்னணியில் இருந்தவர்கள், திருட்டு குடும்பத்தின் வாரிசு மற்றும் அவர்களது கூட்டு கொள்ளையர்களும் எப்படி இதனை கோடி சொத்து வந்தது என்று உன்னால் சொல்லமுடியுமா? எந்த தொழில் செய்து இவ்வளவு சொத்து சேர்த்தார்கள்?


Palanisamy Sekar
ஆக 30, 2024 16:19

சிலை வடித்த சிற்பி இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தியர்களின் மாமன்னன் சத்ரபதி சிவாஜிக்கு சிலை எடுக்க வைத்தது தேசபக்தர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்பாராத நிகழ்வே என்றாலும் அதற்காக மன்னிப்பு கேட்க்கும் பிரதமரின் பண்பு வியக்க வைக்கின்றது. எந்த அளவுக்கு மனதில் வேதனை இருப்பின் மன்னிப்பு கேட்டிருப்பார் பிரதமர். இனியேனும் கூடுதல் கவனம் செலுத்தி சிலையை மீண்டும் அதே இடத்தில நிறுவ ஆவண செய்திட வேண்டும்.


Velan Iyengaar
ஆக 30, 2024 19:54

முட்டு பத்தல பத்தல .... செல்லாது ... செல்லாது .... இன்னிக்கி கூலி கட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை