உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு

ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் கூட்டு சேர பிரதமர் மோடி தான் காரணம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.செயற்கைக்கோள் வழி அதிவேக இணையதள சேவை வழங்க ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இரண்டு நிறுவனங்களும், ஸ்டார்லிங்க்கின் இந்திய வருகையை எதிர்த்தன. இதற்கு வழக்கமான அலைக்கற்றை ஏலம் போல அல்லாமல், நிர்வாக ரீதியான ஒப்புதலை பெற, மத்திய அரசிடம் எலான் மஸ்க் விண்ணப்பித்ததே காரணம்.எலான் மஸ்க் வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் அமைதியை வாங்க விரும்பிய பிரதமர் மோடி, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் உடன் ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்தார் என்பது தெளிவாக தெரிகிறது.இந்தியா வரியை குறைத்து விட்டதாக டிரம்ப் தினமும் கூறி வருகிறார். இந்தியா எதற்கு ஒப்புக் கொண்டது. எதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. எலான் மஸ்க் மகிழ்ச்சியாக இருந்தால், அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியாக இருப்பார் என பிரதமர் நம்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
மார் 14, 2025 10:06

திமுக மற்றும் கூட்டணி ஆட்சியில்... ஜல்லிக்கட்டு தடை செய்தது இந்த புண்ணியவான் (?) தான்.... அதற்கு நம்ம திமுக உடந்தை... ஆனால் தடையை நீக்கி... ஜல்லிக்கட்டு நடக்க காரணமாக இருந்தது மோடி அவர்கள்... ஆனால் நம்ம டாஸ்மாக் டுமிலர்கள் மோடி ஒயிக என்று போடுவார்கள்.... நன்றி கெட்டவர்கள்.


J.V. Iyer
மார் 14, 2025 04:37

இதுபோன்ற பொறுப்பில்லாமல் தவறாக, பொய் பேசும் தேசத்துரோகிகளின் மீது வழக்கு போட்டு தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு துறையை துவக்கலாமே?


Rajan A
மார் 14, 2025 03:01

நடிகை ரன்யா தங்க கடத்தல் விவகாரத்தில் பப்பு உடந்தை என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ, இதுவும் அப்படியே. இவனுங்க எல்லாம் ஏன் ரிடையர் ஆகமாட்டேங்கறாங்க


C.SRIRAM
மார் 14, 2025 00:24

வெட்டிகளின் உளறல்


Sudha
மார் 13, 2025 21:31

உங்க கூட்டத்தில் பசி பசின்னு ஒருத்தர் இது மாதிரி ஏதோ செய்தாராமே


M Ramachandran
மார் 13, 2025 20:59

ஐயா ராமேஷு போயி உங்க சோனியா குடும்ப ஆள்களுக்கு சிறிது வேலை செய்ய ஆட்கள் வேண்டி இருக்கு போய் அவசர வேலையாக கவனியுங்கள்


Ramesh Sargam
மார் 13, 2025 20:10

இந்த காங்கிரெஸ்க்காரர்களுக்கு அதிவிபரீத கற்பனை வளம். அதுவும் மோடிஜிடம் குறை காண அவர்கள் கற்பனை சுனாமி அலை போல வரும். கேடுகெட்டவர்கள் இந்த காங்கிரெஸ்காரர்கள்.


M Ramachandran
மார் 13, 2025 19:18

ஐயா ஜெயாராம் பெயர் பொறுத்தமில்லை மாற்றி கொண்டால் நன்கு உத்தமம்.உங்கள் எடையில் புளுகுவது உங்கள் தலை குடும்பம் முதல் தொண்டர்கள் வரை முதன்மையாக கொண்டுள்ளீர்கள் . நீங்கள் படித்த படிப்பு பொய்யுரைத்தலை முதன்மையாக சொல்லி கொடுத்ததோ.


Naga Subramanian
மார் 13, 2025 18:14

2004 முதல் 2014 வரையிலான ஊழலை யார்தான் மறக்க முடியும்.


Raj
மார் 13, 2025 18:08

கண்டுபிடித்து விட்டார் அறிவியல் விஞ்ஞானி ஜெயராம் ரமேஷ், நடப்பது அவர்கள் ஆட்சி கையெழுத்து ஆக தான் செய்யும்.


புதிய வீடியோ