உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி பட்டறையில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி

பயிற்சி பட்டறையில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாஜ எம்பிக்களுக்கு நடந்த பயிற்சி பட்டறையில் பிரதமர் மோடி, கடைசி வரிசையில் அமர்ந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியான அந்தப் பதவிக்கு வரும் 9 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜ கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா கவர்னரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். ' இண்டி' கூட்டணி சார்பில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சர் ரெட்டி போட்டியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் இந்த தேர்தலில் எம்பிக்கள் பணியாற்ற வேண்டிய விதம் தொடர்பாக பாஜ எம்பிக்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.முதல் நாளான இன்று, ' 2047 ல் வளர்ச்சியடைந்த இந்தியா', மற்றும் ' சமூக வலைதளை்த எம்பிக்கள் திறமையாக கையாள்வது எப்படி ?' என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடந்தது. இன்று காலை 9 மணிக்கு வந்தே பாரதம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் இந்த பயற்சி பட்டறையில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற அவரை ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்ததற்கு எம்பிக்கள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து பிரதமர் மோடி இந்த பயிற்சி பட்டறையில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. மதியம் நடக்கும் நிகழ்வில், விவசாயம், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் போக்குவரத்து குறித்த குழுக்களை எம்பிக்கள் சந்திக்கின்றனர். நாளை நடக்கும் நிகழ்வில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து எம்பிக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
செப் 08, 2025 00:41

எப்பவுமே கடைசி வரிசை மாணவன்தான் சாதிப்பான். மோடி, சாதித்துவிட்டு, கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கிறார், அவ்வளவுதான்.


Gnana Subramani
செப் 07, 2025 20:50

பொய் சொல்லாமல் இருப்பது எப்படி என்று ஏதாவது பயிற்சி இருக்கிறதா


vivek
செப் 08, 2025 06:16

அது திமுகவில் மட்டுமே இருக்கிறது


Priyan Vadanad
செப் 07, 2025 20:40

என்னா அடக்க ஒடுக்கம், என்னா பணிவு, நம் எல்லருக்கும் நல்ல எடுத்துக்காட்டு.


vivek
செப் 08, 2025 06:15

ஆனால் டாஸ்மாக்கில் பிரியன் எப்போதும் முதல் ஆள்


Varadarajan Nagarajan
செப் 07, 2025 18:25

ஏனோ தெரியவில்லை கடைசி வரிசையென்றாலே மிகவும் மட்டம் என்ற எண்ணத்தை பள்ளி, கல்லூரிகளிலிருந்தே மாணாக்கர்களின் மனதில் பதியவைத்துவிட்டார்கள். அது இன்றும் தொடர்கின்றது.


Sundar R
செப் 07, 2025 17:58

சுயமரியாதையும், பகுத்தறிவும் திமுகவினருக்கு இருக்கிறதா? கண்ணுக்கு CATARACT வரலாம். அறிவுக்கு தவறான பகுத்தறிவு என்ற CATARACT வரலாமா?


Ganesun Iyer
செப் 07, 2025 16:40

நாள் உபிஸ் பத்திரிகை செய்தி: பள்ளியில் பரிட்சையின் போது கடைசி பெஞ்சில் அமர்ந்து கேள்வி தாள்களை சரிபார்த்த ஸ்டாலின்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை