உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியுடன் ஒரு செல்பி; யார் அந்த தமிழக தம்பதி!

மோடியுடன் ஒரு செல்பி; யார் அந்த தமிழக தம்பதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜமுய்: பீகாரில், தமிழக பழங்குடி தம்பதியுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட செல்பி படம் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பீகார் மாநிலம், ஜமுய் நகரில், வெள்ளையர்களை எதிர்த்து போராடியவரும், நிலத்தின் தந்தை என்று போற்றப்படுபவருமான பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவரை பழங்குடியின மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களின் இசை வாத்தியத்தை கண்டு ஆச்சரியம் கொண்ட பிரதமர் மோடி, அதை வாங்கி தானும் இசைத்து மகிழ்ந்தார்.நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜனஜாதியா கவுரவ் திவாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு பழங்குடியின சமூகத்தினரின் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு வரிசையாக அமைக்கப்பட்டு இருந்த ஸ்டால்களை பார்த்த படியே அவர் சென்றார். அங்கு அரியலூரைச் சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் ஸ்டால் ஒன்றை அமைத்திருந்தனர். பிரதமர் மோடி அங்கு வந்தபோது, தமிழக பழங்குடியின தம்பதியினர் தாங்கள் காட்சிக்கு வைத்திருந்த பொருட்களை பற்றி கூறினர். பின்னர் அவருடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி அவர்களுடன் ஒரு செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

T.sthivinayagam
நவ 15, 2024 22:00

சூஷ்மம் அறியாத தம்பதி


Skn
நவ 15, 2024 20:30

Selfie demanded by our people and pm agreed. Generosity


Ganesun Iyer
நவ 15, 2024 19:34

இதெல்லாம் மேட்டரா.. எங்க பழைய தளபதி வெடிகுண்டு தீபாவளி செய்யற இடத்திலேயே போட்டோ ஷுட் நடத்தினாரு..


Kumar Kumzi
நவ 15, 2024 19:12

நம்பிள் ஓங்கோல் சின்ன மேளம் அழகான பெண்மணிகளோடு செலஃல்பி எடுக்க தான் pidikum


Narayanan Muthu
நவ 15, 2024 18:48

விளம்பர பிரியர் வேறென்ன செய்வார்.


சமீபத்திய செய்தி