உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வர்த்தகம், எரிசக்தி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிகவரி விதித்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yvd1f0rh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனை தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் முக்கிய வர்த்தகம் தொடர்பான ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி இன்று போனில் வர்த்தகம், எரிசக்தி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:அமெரிக்க, இந்திய இருதரப்பு ஒத்துழைப்பு வலுவடைவதில் திருப்தி. மேலும், பிராந்திய, சர்வதேச முன்னேற்றங்கள், சவால்களை எதிர்கொள்ளும் வழிகள் குறித்து விவாதித்தோம்.மேலும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி, பாதுகாப்புதுறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தோம்.உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.அதிபர் டிரம்புடன் பேசியது மிகவும் அன்பானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்தது.இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
டிச 11, 2025 23:20

அடிபணிய மாட்டோம். சொல்லிப்புட்டேன்.


SUBBU,MADURAI
டிச 12, 2025 14:22

எப்பவும் கேலி கருத்தையேதான் போடுவியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை