உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி ஆகஸ்ட் 23ம் தேதி உக்ரைன் பயணம்; போர் முடிவுக்கு வருமா?

பிரதமர் மோடி ஆகஸ்ட் 23ம் தேதி உக்ரைன் பயணம்; போர் முடிவுக்கு வருமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி உக்ரைன் செல்ல உள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுகிறார். சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, போர் தீர்வு அல்ல; சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புடினிடம் கூறியிருந்தார்.கடந்த மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் ஆரத்தழுவி அன்பினை வெளிப்படுத்தினர். அமைதியை கொண்டு வர தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் இந்தியா தொடர்ந்து செய்யும் என பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உறுதி அளித்திருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qv0612jy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கியதில் இருந்து, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. சமீபத்தில், 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்தித்தார். அப்போது, அவர் போர் தீர்வு அல்ல; சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புடினிடம் கூறியிருந்தார்.இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்ல உள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஆகஸ்ட் 23ம் தேதி சந்தித்து பேசுகிறார். போர் பூமிக்கு மோடி பயணம் மேற்கொள்ளுவது, உலக நாடுகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போரை நிறுத்துவதில் மோடியின் பங்கு முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜூலை 27, 2024 20:12

மணிப்பூருக்கு போக முடியாதவங்க உக்ரனுக்கு போய் சண்டையை நிறுற்றச் சொல்லப்.போறாங்களாம்.


g.kumaresan
ஜூலை 27, 2024 14:44

பாதி நாடு போயிருச்சு இனியாவது சமாதானம்


Kumar
ஜூலை 27, 2024 12:40

உலகில் நடக்கும் போரை மோடி சமாதானப்படுத்த அங்கு செல்கிறார்


venugopal s
ஜூலை 27, 2024 11:19

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்லி போய் நிதி ஆயோக் கூட்டத்தில் எந்த மொழியில் பேசுவார்


sankaranarayanan
ஜூலை 27, 2024 10:28

இந்தியா எப்போதுமே உலகளவில் எந்த நாடுகளிடையே போர் துவங்கினாலும் அங்கே சென்று சமரசம் செய்வதுதான் வழக்கம் அதையேதான் மோடி அவர்களும் பின்பற்றியிருக்கிறார் அதற்குள் அவரைப்பற்றி எதிர்கட்சிக்காரர்கள் கண்ணா பிண்ணா என்று கூக்குரலிட்டார்கள்


s kumar
ஜூலை 27, 2024 11:45

மணிப்பூரில் அமைதி நிலவுகிறது.அடுத்து உக்ரைன்.


karthik
ஜூலை 27, 2024 14:29

உண்மைதான் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தை விட அங்கு அதிக அமைதி நிலவுகிறது தற்போது..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை