உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத் சென்றார் பிரதமர் மோடி

குஜராத் சென்றார் பிரதமர் மோடி

ஆமதாபாத்: ரூ. பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் இன்று (பிப். 24) இரவு குஜராத் சென்றார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ச்சியாக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதையடுத்து இன்று இரவு குஜராத்தின் ஜாம் நகர் வந்திருந்த பிரதமர் மோடியை சாலை நெடுகிலும் பொதுமக்கள் வரவேற்றனர்.அப்போது ‛‛பாரத் மாதா கி ஜே'' என கோஷம் எழுப்பினர். இன்று இரவு ஜாம்நகர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை (பிப்.25) தேவபூமி, துவரகா, ராஜ்கோட், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை