உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தாஹோத்: குஜராத்தில் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.82,950 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக, அங்கு சென்றுள்ள அவர் வதோதராவில் ரோடு ஷோ நிகழ்த்தினார்.அப்போது, சாலையின் இருபக்கங்களிலும் பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு, பிரதமர் மீது பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர்.பின்னர், தாஹோத் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய ரயில்வே துறையின், இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார். மேலும், அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட 9 ஆயிரம் ஹெச்.பி. திறன் கொண்ட எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரி ரயில் இன்ஜின்களானது, இந்திய ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
மே 26, 2025 18:07

இவர் எப்போது பாரதத்தின் பிரதமர் ஆகப் போகிறார்?


SENTHIL NATHAN
மே 26, 2025 16:15

ஃபேக்கு ஐடியில் நடுநிலை நக்கிகள் கதறல் சூப்பர்


MaRan
மே 26, 2025 15:22

இது போன்ற நிலையான ஸ்திரமான நீண்ட கால நேர்மையான அரசு இருந்தால் தான் இது போன்ற நல்ல வளர்ச்சி நிகழும்.. ஜெய் ஹிந்த மோடி ஜி


Ramesh Sargam
மே 26, 2025 13:26

இதுபோன்ற நல்ல திட்டங்கள் எதிர்கட்சியினருக்கு பிடிப்பதில்லை. ஆமாம், பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் நமக்கென்ன. நாம் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் மோடியை ஆதரிப்போம்.


பாமரன்
மே 26, 2025 11:52

அடடே... சின்ராசு கிளம்பியாச்சு போல..


படித்தவன்
மே 26, 2025 12:28

ஆமாம், எங்கள் சின்ன ராஜா மதிப்புக்குரிய மோடி ஐயா தன் சொந்த மாநிலத்திற்கு கிளம்பிச் சென்றுள்ளார். ஓர் நல்ல தலைவனை தேசத்திற்கு அளித்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள். நாம் வழக்கம் போல் நம் மாநில ஆட்சியாளர்களைப் பார்த்து நொந்து கொள்வோம்.


vivek
மே 26, 2025 12:46

நீ கெளம்பி போய் டாஸ்மாக் பாட்டில் மேல பத்து ரூபா குடுத்திட்டு வாப்பா


Arinyar Annamalai
மே 26, 2025 13:08

200ரூவா நீயும் ஓன் வாரிசுகளும் வாழ்க ஒழிக கோஷம் போட்டு முரசொலி படிச்சிட்டு காலம் தள்ளுங்க


Kumar Kumzi
மே 26, 2025 15:26

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்டையின் வயிற்றெரிச்சல் புரிகிறது


J.Isaac
மே 26, 2025 17:59

இந்தியா முழுவதும் குடிச்சிட்டு சீரழிகிறாங்க. ரோஷத்தோடு பேசுகிறவர்கள் இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டுவரவேண்டியது தானே.