உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இயல்பு நிலை வந்துடுச்சா; எந்த உலகத்தில் இருக்கீங்க; மணிப்பூர் முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி

இயல்பு நிலை வந்துடுச்சா; எந்த உலகத்தில் இருக்கீங்க; மணிப்பூர் முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார் என தெரியவில்லை' என, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். உலகம் முழுவதும் பிரதமர் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. மணிப்பூரில் அமைதி இல்லை. நல்லிணக்கம் இல்லை. இயல்பு நிலை இல்லை. முதல்வர் பைரேன் சிங் எந்த உலகில் வாழ்கிறார் என்று தெரியவில்லை. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எதன் அடிப்படையில் இயல்பு நிலை நிலவுகிறது என கூறுகிறார் என தெரியவில்லை.

நல்ல வித்தியாசம்

பிரதமர் உக்ரைனுக்குப் போயிருக்கிறார். ரஷ்யாவுக்குப் போயிருக்கிறார். போலந்துக்குப் போயிருக்கிறார். அவர் நாடு முழுவதும் சென்றிருக்கிறார். உலகின் பிற நாடுகளுக்குச் சென்றாலும், மணிப்பூருக்குச் செல்ல சில மணிநேரம் கூட அவருக்கு நேரமோ விருப்பமோ கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.,வை காங்கிரஸ் வீழ்த்தியது. அவர்கள் நல்ல வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தான் மிக முக்கியமான தேவை.

நல்லிணக்கம்

மத்திய, மாநில அரசுகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் பேசி அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். தற்போதைய முதல்வரால், விஷயங்கள் மேம்படும் என்று நான் நினைக்கவில்லை. பிரதமர் மோடி 16 மாதங்களாக மணிப்பூர் செல்லாதது ஏன்? மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையேயான இனக்கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R SRINIVASAN
ஆக 31, 2024 16:18

ஜைராம்ரமேஷ்-70 வருடம் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி வெட்டு,தீவிரவாதிகலை வேடிக்கை பார்த்து ராணுவ வீரர்களின் கைகளை கட்டிப்போட்டு இப்பொழுது வாய் கிழிய பேசுகிறீர்கள். இனி நீங்கள் தலை கீழாக நின்றாலும் ஆட்சியை பிடிக்க முடியாது


Sivagiri
ஆக 31, 2024 13:32

அதானே - எந்த உலகத்தில் இருக்கிறாங்க ? காங்கிரஸ்னு ஒன்னு இருக்கும்போது அமைதியா இருக்க வுட்ருவோமா நாங்க ? . . .


Kasimani Baskaran
ஆக 31, 2024 13:32

அதானே.. நாங்கதான் கலகத்தை திரும்பத்திரும்ப தூண்டி விடுகிறோம்... எப்படி இல்லாமல் போகும்... இது போன்ற சொந்தக்காலிலேயே சுடும் தத்திகளை வைத்துக்கொண்டு காங்கிரஸ் ஒரு பொழுதும் ஆட்சிக்கு வரமுடியாது.


Velayutham rajeswaran
ஆக 31, 2024 13:04

காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூர் சொர்க்கபுரியாக இருந்ததா ரமேஷ் மெதுவாக அமைதி திரும்புகிறது உன் வாயை கொஞ்சம் மூடவும் ஜல்லிக்கட்டு போட்டியில் அந்நிய செலாவணி மோசடி நடப்பதாக கூறியது நீ தானே


M Ramachandran
ஆக 31, 2024 12:36

ராகுல் அயல் நாட்டு செல்வதிய்ய தவிர்த்தாலேயே இந்தியா அமைதியாக இருக்கும்


M Ramachandran
ஆக 31, 2024 12:34

ஏன் உங்கள் ராகுல் சொல்லி கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்கிறார் இதை இந்திய குடிமக்களாகிய நாங்கள் நாட்டிற்கு எதிராகா சதி செயலில் இடு படு வதற்கு செல்கிறார் என்று சொல்ல லாமா? அதைய்ய ஆற்று கொள்வீர்களா?


Nava
ஆக 31, 2024 12:29

இந்ததாளு செலெக்ட்டிவ் அம்மீனிசிய வால பாதிக்கப்பட்டவர் முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் நடந்தப்ப மணிப்பூர் அமைதிப் பூங்காவாக திகழ்ந்ததாகவும் இப்பொழுது மோசமாக போய் விட்டது போலவும் பேசுகிறார்


Sridhar
ஆக 31, 2024 12:18

பிரதமர் அங்க போனா மட்டும் அந்த மக்கள் தங்கள் வேறுபாடுகளை உடனே மறந்து இணக்கமாயிடுவாங்களா? மெய்டி குக்கி இன பிரச்சனை இனைக்கி நேத்திக்கு இல்ல, ரொம்பகாலமாகவே நடந்துட்டு இருக்கு. இதுக்குள்ள வெளிநாட்டு ஊடுருவல் கஞ்சா போன்ற பலதரப்பட்ட விஷயங்கள் வேற இவனுக என்னமோ, புதுசா இப்போ முளைச்ச விவகாரங்கற ரீதியிலே பேசிட்டு இருக்காங்க


ஆரூர் ரங்
ஆக 31, 2024 12:16

காஷ்மீர் ஹிந்துக்கள் இனப்படுகொலை, பாலியல் வன்முறைக்குள்ளன போது சோனியா மன்மோகன் ராகுல் மட்டுமல்ல நீரும் எட்டிப் பார்க்கவில்லை. காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் ஹிந்துக்கள். காஷ்மீரில் சிறுபான்மையினர். வன்முறை நடத்தியவர்கள் காங்கிரசின் வாக்கு வங்கி.


Kumar Kumzi
ஆக 31, 2024 12:00

அடேய் தேசத்துரோகிகளா நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி இந்திய திருநாட்டை சீரழிக்க நினைக்கும் உன் டாட் இந்தியா திருட்டு கூட்டணி இனி ஒரு காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை