உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். இரு நாடுகள் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். டில்லியில் இருந்து ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி புறப்படுகிறார். முதலில், பிரிட்டன் சென்று, அங்கு ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். இந்த ஒப்பந்தம், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு கார்கள் ஏற்றுமதிகளை எளிதாக்கும். பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, பிரதமர் ஜூலை 25, 26ம் தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.பிரதமர் மோடியின் பயணம் இந்தியா-மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவு அதிபர் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Gnana Subramani
ஜூலை 20, 2025 02:23

உயரிய விருதுக்கு ஒத்துக் கொண்டார்களா


Gnana Subramani
ஜூலை 20, 2025 02:17

உயரிய விருதுக்கு பேசியாகி விட்டதா


Gokul Krishnan
ஜூலை 19, 2025 13:35

எனக்கு ஒரு சந்தேகம் எந்த நாட்டு பிரதமர் அல்லது அதிபர் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்காக இத்தனை முறை வெளி நாடு சென்ற இருக்கிறார்


Sudhakar
ஜூலை 19, 2025 15:03

அப்படினா இதற்கு முன்னாடி இருந்த பிரதமர் எந்த ஆணியும் .,.கள என்று வைத்து கொள்ள வேண்டும் கொத்தடிமை .


vivek
ஜூலை 19, 2025 17:57

கோகுல நந்தா..மற்ற பிரதமர்களுக்கு அவளோ திறமை, அறிவும் இல்லையே


SUBBU,MADURAI
ஜூலை 19, 2025 18:40

PM Modi is set to visit the UK on July 23–24 to sign the HISTORIC INDIA–UK FREE TRADE AGREEMENT Target: $120 Billion bilateral trade by 2030..


Gokul Krishnan
ஜூலை 19, 2025 13:24

யாரும் நீரவ் மோடி லலித் மோடி விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மட்டும் மூச்சு விட கூடாது. புரிஞ்சுதா


Ganapathy
ஜூலை 19, 2025 13:10

ஐயா அவுக பாலை மட்டும் வாங்கிட்டு வராதீக.