உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பக்தர்களுக்கு உதவ போலீசின் கியூ ஆர் கோடு

பக்தர்களுக்கு உதவ போலீசின் கியூ ஆர் கோடு

சபரிமலை: சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வேண்டிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி பத்தனம்திட்டா போலீஸ் கியூ ஆர் கோடு வெளியிட்டுள்ளதுசபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா எஸ்.பி., பி.ஜி. வினோத்குமாரின் உத்தரவில் போலீஸ் சைபர் செல், சபரிமலை போலீஸ் கைடு என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அனைத்து முக்கிய விஷயங்களும் தெரியும்.சபரிமலையில்உள்ள முக்கிய இடங்கள், பக்தர்கள் எது செய்யலாம் செய்யக்கூடாது, உள்ளிட்ட விஷயங்களுடன் போலீஸ் ஹெல்ப் லைன் எண்களும் உள்ளன. போலீஸ் ஸ்டேஷன், அரசு போக்குவரத்துக் கழகம், மருத்துவ பணிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, உணவு பாதுகாப்பு, தேவசம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவற்றுக்கான விவரங்கள் தொலைபேசி எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.வாகனங்களுக்கான பார்க்கிங் கிரவுண்டுகள், கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சபரிமலைக்கு வரும் பாதைகள், தரிசன பாதை, காலநிலை உள்ளிட்ட விவரங்களும் இதில் உள்ளன. இந்த விபரங்கள் அவ்வப்போது அப்டேட் செய்யும் வகையில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை