உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்தது கிடையாது: முன்னாள் தலைமை நீதிபதி பேட்டி

அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்தது கிடையாது: முன்னாள் தலைமை நீதிபதி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' எனது பதவிக்காலத்தில் எந்த அரசியல்வாதியும் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது,'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஒருவர் சட்டத்தை மீறிய விவகாரத்தில் அவரது குடும்பம் என்ன தவறு செய்தது. அவரது வீடு என் இடிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் நீதிபதிகளை போல் நடந்து கொள்ளக்கூடாது.அதிகாரிகள் அவசர கதியில் நடந்து கொள்வது தெரியவந்த பிறகு தான் நீதிமன்றம் தலையிட்டது. அவர்கள், நோட்டீஸ் அளிக்காமல், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் வீடுகளை இடித்தனர். இத்தகைய நடவடிக்கை, குற்றவாளிகளின் உரிமைகளை பறிப்பது மட்டும் அல்லாமல், அவர்களின் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், குழந்தைகள், ஆகியோரின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது. இது சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது நீதிபதிகளுக்கு பதவிக்காலம் நிர்ணயிக்க வேண்டிய தேவையில்லை. அரசு அல்லது அரசியல்வாதிகளிடம் இருந்து எந்த அழுத்தமும் எனக்கு வந்தது இல்லை.நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் சட்டம் இயற்றும் துறைக்கு என தனித்தனி அதிகாரத்தை அரசியலமைப்பு கொடுத்துள்ளது. நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறையானது வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. இவ்வாறு கவாய் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை