உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் பி.ஆர்.கவாய்

இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் பி.ஆர்.கவாய்

புதுடில்லி: இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், திரவுபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்ற பின், காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு கவாய் மரியாதை செலுத்தினார். நவம்பர் 23 வரை, அதாவது ஆறு மாதங்கள் மட்டுமே கவாய் இந்த பொறுப்பை வகிப்பார். பவுத்த மதத்தை சேர்ந்த ஒருவர் இந்திய தலைமை நீதிபதி ஆவது இது முதல் முறை. தலித் பிரிவில் இருந்து கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின், இந்த பொறுப்புக்கு வரும் இரண்டாவது நீதிபதி கவாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை