உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு தேர்வில் முறைகேடு; உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் கைது!

அரசு தேர்வில் முறைகேடு; உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, பீஹார் மாநிலம் பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரை பாட்னா போலீசார் கைது செய்தனர்.பீஹார் தேர்வாணைய பணியாளர் வாரியம் கடந்த டிச., மாதம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 2 நாட்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரை இன்று காலை பாட்னா போலீசார் கைது செய்தனர். வலுக்கட்டாயமாக போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போராட்ட களத்தில் இருந்து பிரசாந்த் கிஷோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த போது, அவரது ஆதரவாளர்கள் வந்தே மாதரம் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என தேர்வாணைய பணியாளர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் 150 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யதுள்ளனர். இந்த போராட்டம் சட்ட விரோதம் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sudha
ஜன 06, 2025 12:24

நாசமா போக


Sudha
ஜன 06, 2025 11:48

என் தமிழ் நாட்டை கெடுத்த பிரசாந்த் கிஷோர் எங்கிருந்தாலும் உருப்பட கூடாது


Barakat Ali
ஜன 06, 2025 10:24

துக்ளக்காரின் குடும்ப அடிமைகள் இவரைப்பற்றி இகழ்ந்து எழுதாதீர்கள்... மீண்டும் ஆட்சியைப்பிடிக்க இவரை கட்சி மேலிடம் அணுக வாய்ப்பு ....


Sampath Kumar
ஜன 06, 2025 09:09

பீகார் அரசு என்பது யார் இருந்தால் சரி அங்கே அரசு தேர்வுகள் முரை கேடு என்பது சர்வ சாதாரணம் குறிப்பாக ரயில்வே துறை வினாத்தாள் வெளி இட்டு சாதனை செய்தவர்கள் இவரு உண்ணாவிரதம் என்பது வரும் ஸ்டண்ட்


குமரன்
ஜன 06, 2025 08:44

மக்களுக்கு நல்லது செய்வார்களா இல்லையா என்று கூட ஆராயாமல் பணத்துக்கு ஆசைப்பட்டு தேர்தல் வியூகம் என்ற போர்வையில் ஒரு கட்சிக்கு குறுக்கு வழியில் ஆட்சிகட்டிலில் ஏற ஐடியா கொடுக்கும் போது தோனலையா ? உங்களைபோன்ற ஆட்களால் நாடு இன்னும் நாசமாகிறது


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 09:32

கரெக்ட். 2014 ல் இவர் பணத்துக்காக, பாராளுமன்ற தேர்தலின் போது செய்த செயலால் 10 வருஷமா இந்தியா பின்னோக்கி விழுந்து கொண்டிருக்கிறது.


VENKATASUBRAMANIAN
ஜன 06, 2025 07:41

பீகாரின் வைகோ போல் ஆகிவிட்டார்


KRISHNAN R
ஜன 06, 2025 07:41

அதெப்படி குமாரு, பிலாட்பாரத்தை.. பிளேட் பாம்.... என்று சொல்லும் ஆட்கள்,, இங்கு ரயில்வே யில...வராங்க


சமீபத்திய செய்தி