உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை

கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: கொலை வழக்கில் பிரபல சாமியார் குர்மித் ராம் ரஹீம் உயர்நீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டார்.ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் நடத்தி வந்தவர் குர்மீத் ராம் ரஹீம்.இவர் ஆசிரம பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஹரியானாவின் ரோஹ்தக் நகரில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். பல முறை பரோல் பெற்று வெளியே வந்துள்ளார்.இந்நிலையில் 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.இந்த தண்டனையை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை இன்று(28.05.2024) விசாரித்த உயர்நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
மே 29, 2024 11:46

பாஜக கட்சியில் சேர்ந்திருப்பாரோ? அதற்கு கிடைத்த வெகுமதியாக இருக்கும்!


இவன்
மே 29, 2024 04:57

கொலை ல விடுதலை பண்ணுன பிஜேபி தப்பு பாலியல் ல தண்டனை கொடுத்த அது பிஜேபி இல்லையா? கொத்தடிமைஸ் ??


J.V. Iyer
மே 29, 2024 02:36

திமுக காரனாக இருந்தால் வழக்கே வந்திருக்காது. எவனாவது ஒரு அடிமைத் தொண்டன் பணத்திற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறையில் இருப்பான். சாமியார்களுக்கு அப்படி யாரும் இல்லை.


Anantharaman Srinivasan
மே 28, 2024 22:41

சாமியார்கள் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும் தண்டிக்கப்பட கூடாது. நடப்பது அப்பேர் பட்ட ஆட்சி. கோர்ட்டுகள் அதை நன்றாக புரிந்து கொண்டுள்ளன.


N MARIAPPAN
மே 28, 2024 20:43

வாழ்க பாரதம்....கொடுமை


அப்புசாமி
மே 28, 2024 20:34

நீதிமன்றங்கள் மேலே அபரிமிதமான நம்பிக்கை வந்திருச்சு. சீக்கிரமே சாமியாராப்.போயிடலாம்னு இருக்கேன். பேர் கூட அப்புசாமியானந்தான்னு மாத்திக்கிலாம்னு இருக்கேன். பஞ்சமா பாதகங்கள் சென்ஹ்சாலும் வெளில வந்துரலாம். தாடிதான் சரியா வளர மாட்டேங்குது. வாங்கி.ஒட்டிக்ஜ வேண்டியதுதான்.


மஹாதேவன்
மே 28, 2024 19:22

பணம் பத்தும் செய்யும்.இந்தியாவில் ஏழைகள் பாவாத்மாக்கள்.இப்பொழுது இந்த சாமியார் அடுத்த தேர்தலில் நின்று மந்திரியாகி விடுவார்.மக்களும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தங்கள் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.


Syed ghouse basha
மே 28, 2024 18:50

சூப்பர் அப்போ ஆட்சி மாற்றம் நிச்சயம்


rsudarsan lic
மே 28, 2024 20:39

இதுக்கு என்ன அர்த்தம்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை