உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேறொருவர் மூலம் கர்ப்பம்; ஏற்காவிட்டால் கொலை: கணவரை மிரட்டிய மனைவி

வேறொருவர் மூலம் கர்ப்பம்; ஏற்காவிட்டால் கொலை: கணவரை மிரட்டிய மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஹராஜ்கஞ்ச்: உத்தர பிரதேசத்தில், வேறொருவரால் கர்ப்பமானதை ஒப்புக்கொண்ட பெண், தன்னையும், பிறக்கப்போகும் குழந்தையையும் ஏற்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும், போலீசில் வரதட்சணை கொடுமை புகார் அளிப்பதாகவும் கணவரை மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு, 2022-ல் திருமணம் நடந்தது. அவரது மனைவி, சந்த் கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணமானதில் இருந்தே கணவரை நெருங்க விடாமல், மனைவி தவிர்த்து வந்துள்ளார். இருவருக்கும் உடல் ரீதியான உறவு இல்லை என, குடும்பத்தினரிடம் கணவர் புலம்பி தவித்துள்ளார். இதனால், தகராறு ஏற்பட்டு, அடிக்கடி தாய் வீட்டுக்கு மனைவி சென்று விடுவது வழக்கம். அதுபோல, கடந்தாண்டு நவம்பரில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி, திரும்பி வரவில்லை. கணவர் நேரில் சென்று, வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது, ஏப்ரலில் வருவதாக மனைவி கூறினார்.அதன்படி, திரும்பி வந்த மனைவிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையில் மனைவி 14 வார கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். 'என்னது கர்ப்பமா?' என 'ஷாக்'கான கணவர், நம்ப முடியாமல் வேறு சில மருத்துவ மனைகளுக்கும் அழைத்துச் சென்றபோது, அங்கும் கர்ப்பம் உறுதியானது. ஆவேசமடைந்த கணவர், மனைவியிடம் விசாரித்தபோது, தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியபோது, 'ஆமாம், வேறு ஒருவரால் தான் கர்ப்பமாக இருக்கிறேன். 'அதற்கென்ன? என்னையும் பிறக்கப்போகும் குழந்தையையும் ஏற்காவிட்டால், உன்னை கொன்று விடுவேன். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிப்பேன்' என மனைவி கூறியதால், கணவர் கடும் அதிர்ச்சியடைந்தார். மஹராஜ்கஞ்ச் போலீஸ் ஸ்டேசனில், அவர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'பாலின சமத்துவ சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் இது. 'தலைவிதி இதுதான் என சமாதானமாகி மனைவியையும் குழந்தையையும் ஏற்பதைத் தவிர, அவருக்கு நம் நாட்டு சட்டப்படி வேறு வழியில்லை' என, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Natchimuthu Chithiraisamy
ஏப் 24, 2025 10:55

ஆங்கில சட்டத்தில் தலைப்பு பெயர் மட்டும் மாற்றிய சட்டம் இந்திய சட்டம்


Nandakumar Naidu.
ஏப் 20, 2025 22:16

எவனால் கர்பமானாளோ அவனிடமே துரத்தி விட வேண்டியது தான்.


தஞ்சை மன்னர்
ஏப் 20, 2025 12:45

உ பி ன்னலே இது சகஜம்தான்


Shankar
ஏப் 20, 2025 11:05

குடும்ப விஷயத்தில் பஞ்சாயத்து பேசும் நெட்டிசன்களுக்காக சொல்கிறேன். அவனவனுக்கு வந்தால் தான் தெரியும். இது அடுத்தவனுக்கு இல்லையா வந்திருக்கு. அதுக்குதான் வெட்டி நியாயம் பேசுறீங்க.


Anantharaman Srinivasan
ஏப் 20, 2025 10:52

நீ அடிக்கடி குறிப்பிடுவது முகலாய மன்னன் அந்தகால முகமது பீன் துக்ளக்கா?


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 20, 2025 10:14

கண்ணை மூடிக்கொண்டு மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதால் இது போல் நடப்பதில் ஆச்சரியம் இல்லை. நம் பாரத தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு, தர்மத்தை கூறி நம் குழந்தைகளை வளர்க வேண்டும்.


எம். ஆர்
ஏப் 20, 2025 08:57

டிஎன்ஏ சோதனை செய்தபின் குழந்தை அந்த கணவனுக்கு பிறக்கவில்லை என நீதிமன்றத்தில் உறுதியானால், விரைவாக கணவன் விவாகரத்து பெற முடியும் இதையெல்லாம் பார்த்தால் கல்யாணம் செய்யவே இப்போதெல்லாம் மிகவும் பயமாக இருக்கிறது கேடுகெட்ட சமூகம் எங்கே செல்கிறது?? பெண் உரிமை என்பது இதுதானா??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 20, 2025 07:54

இந்த ஆண் கண்காணாத இடத்துக்கு ஓடிட்டா ??


Ravi
ஏப் 20, 2025 08:35

அவர் ஓடிவிட்டான் தாய் தந்தையை கவனிப்பது யார்..


Kasimani Baskaran
ஏப் 20, 2025 06:50

நன்னடத்தை இல்லை என்று மணமுறிவு கோருவதுதான் இருக்கும் ஞாயமான வழி


Ravi
ஏப் 20, 2025 08:37

அப்போதும் சட்டத்தால் பாதிக்க போவது அவர் தான்


Rangarajan Cv
ஏப் 20, 2025 06:42

Whether we progress intellectually, economically or not, we learn unwanted habits very fast. Whom to blame? Degeneration of our values???.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை