உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடர்ந்து 2வது முறையாக சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு

தொடர்ந்து 2வது முறையாக சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்டாக்: சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி தலைவர் பிரேம் சிங் தமாங், தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று (ஜூன் 10) பதவியேற்றார்.சிக்கிம் சட்டசபையில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. ஜூன் 2ல் வெளியான தேர்தல் முடிவில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்தது. அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங், தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, இன்று (ஜூன் 10) மாநிலத் தலைநகரான காங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், பிரேம் சிங் தமாங், முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vathsan
ஜூன் 10, 2024 18:08

தமங் சிறப்பான சம்பவத்தை சிக்கிமில் செயதார். காங்கிரஸ், பிஜேபி ரெண்டுமே அணைத்து தொகுதிகளில் டெபாசிட் இழந்து 0 சீட்களை பெற்றனர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை