| ADDED : ஜூன் 07, 2024 07:51 PM
காங்டாங்க் : சிக்கிம் மாநில முதல்வராக பிரேம் சிங் தமாங் வரும் 10-ம் தேதி பதவிறே்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில், வடகிழக்கு மாநிலமான சிக்கிம் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில், 31ல் வென்று ஆளும் எஸ்.கே.எம்., எனப்படும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறை ஆட்சி அமைக்க உள்ளது.முதல்வரும், எஸ்.கே.எம்., தலைவருமான பிரேம் சிங் தமாங், கவர்னர் லக் ஷ்மண் பிரசாத் ஆச்சாரியாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து வரும் 10-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.