உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்

கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார். கர்நாடகாவின் கார்வார் கடற்படைத் தளத்தில் உள்ள முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார். அவருடன் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதியும் சென்றார்.Galleryமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பிறகு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 2வது ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றார். 2006ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் அப்துல் கலாம் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக் ஷீர் சிறப்பு இதுதான்!

* ஐ.என்.எஸ்., வாக் ஷீர் என்பது, ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும். இது பல வகைகளில் பயன்படக்கூடியது.* நிலத்தில் இருந்து வரும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளை எதிர்க்கும் திறன் இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளது. மேலும், உளவு தகவல்களையும் திரட்டும் திறன் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை